ரெயில்வே அமைச்சகம்

வடகிழக்கு ரயில்பாதையில் இதுவரை 75% -க்கும் கூடுதலாக மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது: 2022-க்குள் 100% மின்மயமாக்கப்படும்

Posted On: 04 JAN 2022 1:02PM by PIB Chennai

வடகிழக்கு ரயில்வே 2021-ல் பயணிகளுக்கு பாதுகாப்பு, பந்தோபஸ்து, விரைவு, வசதி, நம்பகமான போக்குவரத்து ஆகியவற்றை வழங்கியிருக்கும் பயணிகள் நலன் சார்ந்த முக்கியமான மண்டலங்களில் ஒன்றாகும்.

 2021-ல் வடகிழக்கு ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டங்கள்

  • பாதை மாற்றம் 47 கி.மீ.
  • இரட்டைப் பாதை மற்றும் மின்மயம் 101 கி.மீ.
  • மின்மயமாக்கம் 406 கி.மீ.
  • பல்லியா, காசிப்பூரில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகள்

பயணிகளுக்கான வசதிகள்

  • 10 ரயில்களில் 24 நகரும் மின்படிகள்
  • 8 ரயில் நிலையங்களில் 22 மின் தூக்கிகள்
  • 47 ரயில் நிலையங்கள் ஆதர்ஷ் நிலையங்களாக மேம்பாடு
  • 895 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி

எரிசக்தி சேமிப்பு

·         வடகிழக்கு ரயில்பாதையில் இதுவரை 75% -க்கும் கூடுதலாக மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது: 2022-க்குள் 100% மின்மயமாக்கப்படும்

·         பிரதான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்ட பின் அதிவேக டீசல் என்ஜின்களுக்கான செலவு குறைந்து ரூ.361 கோடி மிச்சமாகும்.

·         வடகிழக்கு ரயில்வே 2021-ல் போக்குவரத்து வகைமையில் கௌரவமிக்க தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளில் முதல் பரிசை பெற்றுள்ளது.

·         4 ரயில் நிலையங்களில் நாளொன்றுக்கு 700 கிலோ லிட்டர் திறன் கொண்ட தண்ணீர் மறுசுழற்சி நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

***



(Release ID: 1787416) Visitor Counter : 170