மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

‘பதே பாரத்’ என்ற 100 நாள் படிக்கும் பிரச்சாரம்: மத்திய கல்வி அமைச்சர் நாளை தொடக்கம்

Posted On: 31 DEC 2021 2:50PM by PIB Chennai

பதே பாரத்’ என்ற 100 நாள் படிக்கும் பிரச்சாரத்தை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நாளை(ஜனவரி 1ம் தேதி) தொடங்கி வைக்கிறார். மாணவர்களின் படைப்பாற்றல், விவேக சிந்தனை, சொல்வளம், பேச்சு மற்றும் எழுத்து மூலமாக வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்த 100 நாள் படிக்கும் பிரச்சாரம் முக்கியமான நடவடிக்கையாகும்.

இது தங்களின் சுற்றுச்சூழலை, நிஜ வாழ்க்கையுடன் தொடர்புபடுத்த குழந்தைகளுக்கு உதவும்.

 

ஆரம்ப பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்காக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 1ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கு (14 வாரங்கள்) ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இந்த பிரச்சாரம் நடத்தப்படும்.

இதில் குழந்தைகள், ஆசிரியர்கள், சமுதாயம், கல்வித்துறை நிர்வாகிகள் என அனைவரின் பங்களிப்பும் இருக்கும். படிப்பதை சுவாரஸ்யமாக மேற்கொள்ளும் வகையில், ஒரு குழுவுக்கு வாரம் ஒரு பயிற்சி உருவாக்கப்பட்டுள்ளது. இது படிக்கும் மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் ஏற்படுத்த உதவும்.

 

குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி, இந்த படிக்கும் பிரச்சாரத்தின் பயிற்சிகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிரப்பட்டுள்ளன.  இந்த பயிற்சிகளை குழந்தைகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் செய்ய முடியும். இந்த படிக்கும் பிரச்சாரத்தை பயனுள்ளதாக்க, இந்த பயிற்சிகள் எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒரு வேளை பள்ளிகள் மூடப்பட்டாலும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே, குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன்.  இந்த பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும்.

                                                                                ****************************

 

 

 



(Release ID: 1786645) Visitor Counter : 175