பிரதமர் அலுவலகம்
பிரதமர் உத்தராகண்டிற்கு டிசம்பர் 30-ம் தேதி பயணம் மேற்கொண்டு ரூ.17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்
Posted On:
28 DEC 2021 8:09PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, டிசம்பர் 30ம் தேதி உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானிக்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.17,500 கோடிக்கும் மேற்பட்ட 23 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், மேலும் பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
23 திட்டங்களில், ரூ.14,100 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இவற்றில் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில். பாசனம். சாலை வசதி, வீட்டு வசதி, சுகாதார உள்கட்டமைப்பு, தொழில், தூய்மைப் பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்டத் திட்டங்கள் அடங்கும்.
பல்முனை சாலை விரிவாக்கத் திட்டங்கள், பித்தோராகரில் ஒரு புனல்மின் திட்டம் ஆகியவையும் தொடங்கி வைக்கப்படுகின்றன. இவற்றின் செலவு மதிப்பு, ரூ.3,400 கோடியாகும்.
பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ள திட்டங்களில், லக்வார் பன்னோக்குத் திட்டமும் ஒன்றாகும். 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இது ஆறு மாநிலங்களுக்கு பயன் அளிக்கக் கூடியதாகும்.
ரூ.8,700 கோடி மதிப்பிலான சாலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் தொலைதூரத்தில் உள்ள இடங்களை இணைக்கும் பிரதமரின், தொலைநோக்குக்கு ஏற்ப இது செயல்படுத்தப்படும். இதன் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை இணைப்பு மேம்படுத்தப்படும்.
உத்தம்சிங் நகரில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் துணை மையம், பித்தோரகரில் ஜெகஜீவன் ராம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் முயற்சிக்கு ஏற்ப இது செயல்படுத்தப்படும்.
காசிப்பூரில் அரோமா பூங்கா, சித்தார்கஞ்சில் பிளாஸ்டிக் தொழிற்பூங்கா, பல்வேறு பகுதிகளில் வீட்டு வசதி, சுகாதார திட்டங்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு குடிநீர் விநியோகத்திட்டங்கள் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785898
-------
(Release ID: 1786386)
Visitor Counter : 211
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam