நித்தி ஆயோக்
அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நித்தி ஆயோக் ஆகியவை ‘உங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள்’, ‘அறிவுத் திறன் கொண்ட புதிய கண்டுபிடிப்பாளர்கள்’ ஆகிய தொகுப்புகளை வெளியிட்டன
Posted On:
29 DEC 2021 4:24PM by PIB Chennai
அடல் தொழில் உதவி மையங்களின் ஆதரவுடன் வேளாண்மை சார்ந்த 70 புதிய தொழில்கள் மூலமான கண்டுபிடிப்புகளின் தொகுப்பான ‘உங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள்’ என்ற இரண்டாவது தொகுப்பையும், இந்தியாவின் அடல் தொழில் உதவி ஆய்வுக் கூடத்திலிருந்து தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட 41 புதிய கண்டுபிடிப்புகளின் தொகுப்பாக ‘அறிவுத் திறன் கொண்ட புதிய கண்டுபிடிப்பாளர்கள்’ தொகுப்பையும் அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நித்தி ஆயோக் ஆகியவை வெளியிட்டன.
இந்த இரண்டு தொகுப்புகளும் இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்களின் வெற்றிக் கதைகள் பற்றியவையாகும். முதலாவது நூல் எதிர்காலத்திற்கான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இந்திய தொழில் முயற்சி சிந்தனைகளின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளின் தொகுப்பாகும். இரண்டாவது நூல், அடல் புதிய கண்டுபிடிப்பு மாரத்தானில் பங்கேற்ற இளம் மாணவ கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த கண்டுபிடிப்புகள் பற்றிய தொகுப்பாகும்.
டிஜிட்டல் முறையிலான இந்த நூல்கள் இணைய வழியாக நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், நித்தி ஆயோக்கின் வேளாண் பிரிவு உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த், மை கவ் தலைமை நிர்வாக அதிகாரி திரு அபிஷேக் சிங், நித்தி ஆயோக்கின் அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786070
•••••••••••••••
(Release ID: 1786101)
Visitor Counter : 371