தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2021 ஆண்டு கண்ணோட்டம்: தபால் துறை.
प्रविष्टि तिथि:
29 DEC 2021 11:33AM by PIB Chennai
150 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் தகவல் தொடர்புக்கு முதுகெலும்பாக அஞ்சல் துறை திகழ்வதோடு, நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
தபால் விநியோகம், சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ் வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்வது, அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு, கட்டணங்களின் வசூல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஊதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு சேவைகளை குடிமக்களுக்கு இது வழங்கி வருகிறது.
2021-ம் ஆண்டில் அஞ்சல் துறையின் பல்வேறு முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
கிராமப்புறங்களில் உள்ள 98,454 தபால் நிலையங்கள் உட்பட 1.43 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் போஸ்ட்மேன் கைபேசி செயலி செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விரைவு தபால் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வழங்குவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தபால் துறையுடன் இணைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1263 அஞ்சல் சேவை வாகனங்களில் ஜிபிஎஸ் வசதியை அஞ்சல் துறை பொருத்தி வருகிறது.
தபால் பொருட்களுக்கான சுங்க அனுமதியை விரைவாக பெற 120 நாடுகளுடன் பலதரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
இரண்டாவது கோவிட் அலையின் போது வெளிநாட்டில் இருந்து தபால் மூலம் பெறப்பட்ட கொவிட் தொடர்பான அவசரகால ஏற்றுமதிகளை அனுமதித்தல், செயலாக்குதல் மற்றும் விநியோகத்தில் அஞ்சல் துறை உதவுகிறது.
1.67 கோடி புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன; சுமார் ரூ 8.19 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் கையாளப்பட்டுள்ளன.
2.26 கோடி தங்க மகள் கணக்குகள் அஞ்சல் துறையால் தொடங்கப்பட்டுள்ளன.
ஜனவரி 2021 முதல் அக்டோபர் 2021 வரை 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூலம் செயலாக்கப்பட்டன.
ஜனவரி, 2021 முதல் அக்டோபர், 2021 வரை 13,352 அஞ்சல் அலுவலக ஆதார் மையங்கள் மூலம் 1.49 கோடிக்கும் அதிகமான ஆதார் பதிவுகள் / மேம்படுத்தல்களுக்கான கோரிக்கைகள்.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 90 மாவட்டங்களில் 1789 கிளை தபால் நிலையங்கள் திறக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785991
(रिलीज़ आईडी: 1786085)
आगंतुक पटल : 318