மத்திய அமைச்சரவை
இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும், மொரீசியஸின் போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
22 DEC 2021 5:23PM by PIB Chennai
ஏகபோகத்திற்கு எதிரான சட்டம் மற்றும் கொள்கையை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான ஒத்துழைப்பு தொடர்பான இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும், மொரீசியஸின் போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும் போட்டிக்கு எதிரான கட்டுப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதும், இந்திய போட்டி ஆணையத்தால் போட்டிச்சட்டம் 2002-ன் அமலாக்கத்தை மேம்படுத்தவும், போட்டிக் கொள்கை பற்றிய புரிதலை அதிகப்படுத்தவும், திறன் கட்டமைப்புக்கும், தூதரக ரீதியிலான பயன்களைக் கொண்டு வரவும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
•••••••••••••••••
(रिलीज़ आईडी: 1784333)
आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam