தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிக்க பிரசார் பாரதி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
20 DEC 2021 2:50PM by PIB Chennai
இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரசார் பாரதி நிறுவனமும், கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலுடன் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலுடன் தொடர்புடைய பிரசித்திப் பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள், தூர்தர்ஷனின் தேசிய மற்றும் சர்வதேச அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படும்.
நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் டிடி நேஷனல், டிடி இந்தியா, தூர்தர்ஷனின் மண்டல அலைவரிசைகள் மற்றும் பிரசார் பாரதி செய்தி சேவைகளில் (பிரசார் பாரதியின் டிஜிட்டல் அமைப்புகள்) வாராந்திர நிகழ்ச்சியாக இடம்பெறும்.
கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் ஒத்துழைப்புடன், தூர்தர்ஷன் தலா அரைமணிநேரம் ஒலிபரப்பாகக்கூடிய 52 எபிசோடுகளை தயாரித்துள்ளது. பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி திரு சசிசேகர் வெம்பட்டி, உறுப்பினர் (நிதி), திரு டி பி எஸ் நேஹி ஆகியோர் முன்னிலையில், தூர்தர்ஷனின் தலைமை இயக்குநர் திரு மயங் குமார் அகர்வால், கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் தலைமை இயக்குநர் திரு தினேஷ் கே பட்நாயக் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783407
*****************
(रिलीज़ आईडी: 1783491)
आगंतुक पटल : 279