கலாசாரத்துறை அமைச்சகம்

வந்தே பாரதம் இறுதிப் போட்டி 19 டிசம்பர் அன்று புதுதில்லியில் நடைபெற உள்ளது


4 மண்டலங்களையும் சேர்ந்த 949 நடனக் கலைஞர்களை உள்ளடக்கிய 73 குழுக்கள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன

வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படும் 480 நடனக் கலைஞர்கள் புதுதில்லியில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்

Posted On: 15 DEC 2021 11:36AM by PIB Chennai

சுதந்திரப் பெருவிழா கொண்டாட்டத்தின் கீழ்  ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய நடனப் போட்டியான ‘வந்தே பாரதம் – நிர்த்ய உத்சவ்‘ (‘Vande Bharatam-Nritya Utsav’) இறுதிப் போட்டிக்கு, நாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த 949 நடனக் கலைஞர்கள் அடங்கிய 73 குழுக்கள் தகுதிப் பெற்றுள்ளன. இறுதிப் போட்டி டிசம்பர் 19 அன்று புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க கலையரங்கில் நடைபெற உள்ளது. இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக சுதந்திரப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அமைச்சகமும். கலாச்சார அமைச்சகமும் இணைந்து ‘வந்தே பாரதம் – நிர்த்ய உத்சவ்‘ நடத்தப்படும் என அறிவித்திருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தலைசிறந்த நடனக் கலைஞர்களை தேர்வு செய்து, 2022 ஆம் ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் கலை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும் விதமாக, ஜன் பாகிதாரி அடிப்படையிலான இந்த தனித்துவமான முன்முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டியில், நடனக் கலைஞர்களுக்கு பெரும் கவுரவம் காத்திருப்பதோடு, வாழ்நாளில் ஒரு அரிய வாய்ப்பாக, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் காணப்படும் குடியரசு தின அணிவகுப்பில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மண்டல அளவிலான போட்டிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து 2400-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் 104 குழுவினர் தங்களது நடனத் திறமையை நடுவர் குழு முன்பாக வெளிப்படுத்தினர். பாரம்பரிய நடனம், நாட்டுப்புற, பழங்குடியின மற்றும் கலவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நடனங்களை ஆடினர். இந்தியா முழுவதிலுமிருந்து வண்ணமயமான உடையணிந்து வந்தவர்கள் தங்களது தனிச் சிறப்புமிக்க திறமையை வெளிப்படுத்தியதை காண முடிந்தது. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் உற்சாகத்துடன் பங்கேற்று, ஒன்றுபட்ட பாரதம், வலிமையான பாரதம் என்பதை எடுத்துரைத்தனர்.

#Delhi-யில் நடைபெற்ற #VandeBharatam மண்டல அளவிலான  4-வது போட்டியில் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த வண்ணமயமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். வெற்றியாளர்கள் 2022 குடியரசு தின அணிவகுப்பில் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். 19 டிசம்பர் இறுதிப் போட்டியை காண கீழே உள்ளதை அழுத்தவும்: https://t.co/PG7zqzR9pG@MinOfCultureGoI @AmritMahotsav #EBSB #AmritMahotsav pic.twitter.com/12jSSVkTOp

— PIB Culture (@PIBCulture) December 14, 2021

முதல் 480 இடங்களைப் பிடிக்கும் நடனக் கலைஞர்கள் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, புதுதில்லி ராஜ பாதையில் 26 ஜனவரி 2022 அன்று நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் இசை நிகழ்ச்சி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற உள்ளனர்

#वाराणसी के रुद्राक्ष समूह के प्रतिभागियों ने 12 दिसंबर को #दिल्ली में #VandeBharatam नृत्य उत्सव की उत्तर क्षेत्र स्तरीय प्रतियोगिता में एक जीवंत प्रस्तुति दी। 19 दिसंबर को भव्य फाइनल नीचे दिए गए लिंक पर देखें: https://t.co/jxXy9gTbB2#AmritMahotsav #EBSB @MinOfCultureGoI https://t.co/LPVeNvA2t0

— PIB Culture (@PIBCulture) December 14, 2021

நவம்பர் 17 தொடங்கிய மாவட்ட அளவிலான வந்தே பாரதம் போட்டியில் 323 குழுக்களைச் சேர்ந்த 3870-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நவம்பர் 30, 2021 அன்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். 4 டிசம்பர் 2021 வரை 5 நாட்களுக்கு நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியையொட்டி 20-க்கும் மேற்பட்ட காணொலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

 

3000 நடனக் கலைஞர்கள் / போட்டியாளர்களிலிருந்து மாநில அளவிலான போட்டிக்கு 300-க்கும் மேற்பட்ட குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, விருப்பமுள்ள அனைவரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ஏதுவாக தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்தது.

இறுதிப் போட்டியை வந்தே பாரதம் அதிகாரபூர்வ முகநூல் பக்கம் மற்றும் யூ டியூப் அலைவரிசையிலும், வலைதளம்  (vandebharatamnrityautsav.in)  மற்றும் செல்போன் செயலியில் நேரலையாக காணலாம்.

****



(Release ID: 1781737) Visitor Counter : 219