சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு 2775 வென்டிலேட்டர்களும், புதுச்சேரிக்கு 107 வென்டிலேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 14 DEC 2021 2:17PM by PIB Chennai

மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு நாடு முழுவதும் சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்கள்) கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தேவையின் அடிப்படையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வென்டிலேட்டர்களை வாங்க உத்தரவிட்டது.

இந்த வென்டிலேட்டர்களை இயக்குவது குறித்து மாநிலங்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு, 19,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் எல்லா நேரங்களிலும் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர்களின் பராமரிப்பு, குழாய் அமைப்புகளில் உகந்த ஆக்ஸிஜன் அழுத்தம் உள்ளிட்ட மருத்துவமனை உள்கட்டமைப்பின் தயார்நிலை, வென்டிலேட்டர்களுக்கு தேவையான நுகர்பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்றவர்களால் இந்த வென்டிலேட்டர்களை இயக்குதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு 2775 வென்டிலேட்டர்களும், புதுச்சேரிக்கு 107 வென்டிலேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781271

********



(Release ID: 1781338) Visitor Counter : 226