புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கியது.

प्रविष्टि तिथि: 11 DEC 2021 5:06PM by PIB Chennai

சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு  பார்வையாளர்  அந்தஸ்தை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சாரத் தொகுப்பு”- கொள்கைக்கு  இது ஊக்கம் தரும். சமமான எரிசக்தி தீர்வுகளை உலகத்திற்கு வழங்க இது உதவும்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு பார்வையாளர்  அந்தஸ்தை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க முடிவு மாண்புமிகு பிரதமரின் ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சார தொகுப்பு எனும் லட்சியத்தை நோக்கிய படிக்கல்லாக இருக்கும் என்று மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தமது வாழ்த்து டிவிட்டர் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

சூரிய சக்தி பயன்பாட்டின் மூலம் நியாயமான மற்றும் சமமான எரிசக்தி தீர்வுகளை வழங்குவதற்கான முன்முயற்சிக்கு மிகப்பெரும் உத்வேகத்தை இது வழங்கும் என்று திரு சிங் கூறியுள்ளார்.

சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் நிகர பூஜ்ஜிய கரிம உமிழ்வு எனும் இலக்கை எட்டுவதற்கும் இது பெரியளவில் உதவும் என்று கூறியுள்ள அவர், இந்த லட்சியத்திற்கு இந்தியா பெரிதும் பங்காற்றி வருவதாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1780469

                                                                                               *************


(रिलीज़ आईडी: 1780486) आगंतुक पटल : 386
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Odia , Telugu