வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கின் ஏராளமான வளங்களை உலகம் இன்னும் காணவில்லை : திரு பியூஷ் கோயல்

Posted On: 10 DEC 2021 10:57AM by PIB Chennai

வடகிழக்கின் ஏராளமான வளங்களை உலகம் இன்னும் காணவில்லை என்று கூறியுள்ள திரு பியூஷ் கோயல் புதுதில்லியில் மேகாலயன் ஏஜ்என்ற அங்காடியைத் திறந்து வைத்தார். மேகாலயாவின் மல்பரி பட்டு தவிர சால்வைகள், மூங்கில், கைவினைப் பொருட்கள் மற்றும்  வடகிழக்கின் இதர பல்வேறு தனித்துவ பொருட்கள் இந்தியாவிலிருந்து வருவோருக்கான பெரிய சந்தையாக இருப்பதோடு மட்டுமின்றி  உலகம் முழுவதிலுமிருந்து வருவோருக்கும் உள்ளது என்று மத்திய  தொழில் வர்த்தகத்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, ஜவுளித்துறை அமைச்சர்  திரு பியூஷ் கோயல் கூறினார்.

 இந்த அங்காடியை தேசிய தலைநகர் தில்லியின் மையப்பகுதியில் அமைத்துள்ளதற்காக மேகாலயா முதலமைச்சர் திரு கொனார்ட் சங்மாவுக்குப் பாராட்டு தெரிவித்த திரு பியூஷ் கோயல் மேகாலயாவின் உயரிய கலாச்சாரம், பாரம்பரியம், கலைப் பொருட்களை காட்சிப்படுத்துவதாக இருக்கும் என்றும் இது மாநிலத்தின் குடிசைத் தொழிலுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் கூறினார்.

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜென்ரல் பிபின் ராவத் நினைவுக்கு இந்த அங்காடியை அர்ப்பணித்த திரு கோயல் அவர் உண்மையான கர்மயோகியாக விளங்கினார் என்றும்  இந்தியாவை மகத்தான சக்தியாக மாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் புகழஞ்சலி செலுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779961


(Release ID: 1779998) Visitor Counter : 149