பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

ஸ்மார்ட் போன் மற்றும் இணையதள பயன்பாட்டால் குழந்தைகளின் கவனம் குறைகிறது : நாடாளுமன்றத்தில் தகவல்

Posted On: 08 DEC 2021 3:36PM by PIB Chennai

ஸ்மார்ட் போன் மற்றும் இணையதள பயன்பாட்டால் குழந்தைகளின் கவனம் குறைகிறது என மாநிலங்களவையில்  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

ஸ்மார்ட் போன் மற்றும் இணையதளம் பயன்பாட்டால் குழந்தைகள் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த கேள்விக்கு, அவர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

செல்போன்கள் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய சாதனங்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR)  சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் நாட்டின் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளைச் சேர்ந்த 5000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் படி 23.80 சதவீத குழந்தைகள்  தூங்குவதற்கு  முன்பாக படுக்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். வயது அதிகமான குழந்தைகளிடம்  இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது குழந்தைகளிடம் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  தகாத நேரத்தில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நலனில்  மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.  இதனால்  குழந்தைகளிடம் கவனம் குறைகிறது. ஸ்மார்ட் போன் பயன்பாடு காரணமாக 37.15 சதவீத குழந்தைகளிடம் கவனம் குறைந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைக்க, குழந்தைகளை விளையாட செய்வதற்கு, மைதானங்களை ஏற்படுத்த வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்  பரிந்துரை செய்துள்ளது. 

                                     **************

 



(Release ID: 1779425) Visitor Counter : 113