சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைச் செய்திகள்

प्रविष्टि तिथि: 08 DEC 2021 9:15AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 129.54 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 93,733. இது 555 நாட்களில் குறைந்த அளவாகும்

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.27 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.36 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்கு பின் இது மிக அதிகமான அளவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 9,525 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,89,137 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  8,439 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 0.70, இது கடந்த 65 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

வாராந்திர பாதிப்பு விகிதம் 0.76 ஆகும்.  இது கடந்த 24 நாட்களில் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 65.06 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779088


(रिलीज़ आईडी: 1779100) आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam