சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பலவகையான பெருந்தொற்றுகளைக் கையாள மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

प्रविष्टि तिथि: 07 DEC 2021 3:46PM by PIB Chennai

கொவிட்-19 காலத்தில் பயிற்சி அளிப்பதும், திறன் கட்டமைப்புக்கும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. கொவிட்-19-க்கு பொருத்தமான பயிற்சி, இணையவழி பயிற்சி உட்பட, மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்றும் இணைக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும்  அளிக்கப்பட்டது.

 பல்வேறு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ஒருங்கிணைந்த அரசு இணையவழி பயிற்சி (iGOT) என்ற இணைய தளத்தை மத்திய அரசு பயன்படுத்தியது. கொவிட்-19-ன் தொடக்கத்திற்கு பின் நாடு முழுவதும் இந்த இணைய பக்கத்தில் சுமார் 14 லட்சம் தனித்துவ பயன்பாட்டாளர்கள் பதிவு செய்திருந்தனர். பல்வேறு பயிற்சிகளுக்கு 29.29 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.

 கூடுதலாக மாநில அரசுகள் மூலம் கொவிட் தொடர்பான தலைப்புகளில் 80 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கொவிட் தொடர்பான விஷயங்களில் இணையவழி கருத்தரங்க நிகழ்வுகள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டன.

மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இந்த தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778830

                                                                                                         ****
 


(रिलीज़ आईडी: 1778999) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Manipuri , Bengali , Telugu , Malayalam