பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
உஜ்வாலா திட்டத்தின் நீடித்தத்தன்மை
Posted On:
06 DEC 2021 1:23PM by PIB Chennai
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 9,12,036 சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட சமையல் எரிவாயு இணைப்பு உட்பட 2020-21 மற்றும் 2021-22 (ஏப்ரல் – அக்டோபர் 2021) நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட எரிவாயு இணைப்புகளின் விவரத்தை மாநிலம் வாரியாக தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ்நாட்டில், 9,12,036 சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதுடன், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 33,76,644 இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க கரீஃப் கல்யாண் திட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை உஜ்வாலா திட்டப்பயனாளிகளுக்கு 3 எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778404
------
(Release ID: 1778499)
Visitor Counter : 228