இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஒலிம்பிக் திட்ட பிரிவில், முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு

Posted On: 02 DEC 2021 4:13PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இன்னும் முன்னேற, ஒலிம்பிக் திட்ட பிரிவில் (எம்ஓசி) முன்னாள் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளது.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

 

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களையும், பாராலிம்பிக் போட்டியில் 19 பதக்கங்கங்களையும் இந்தியா வென்றது. இதற்கான பயிற்சியில் முன்னாள் வீரர்கள் அளித்த யோசனைகள் மற்றும் முக்கிய பங்காற்றின என அவர் கூறினார். 

புதிய ஒலிம்பிக் திட்ட பிரிவில்(எம்ஓசி) முன்னாள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் பைசங் புடியா, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற அஞ்சு பாபி ஜார்ஜ், முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தரா சிங், துப்பாக்கி சுடும் போட்டி வீராங்கனை அஞ்சலி பகவத் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777252

 



(Release ID: 1777459) Visitor Counter : 165