குடியரசுத் தலைவர் செயலகம்

5-வது சர்வதேச அம்பேத்கர் மாநாட்டின் தொடக்க விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 02 DEC 2021 1:44PM by PIB Chennai

எஸ்.சி மற்றும் எஸ்.டி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பும், டாக்டர் அம்பேத்கர் வர்த்தக சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 5-வது சர்வதேச அம்பேத்கர் மாநாட்டை, குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், புதுதில்லியில் இன்று (02.12.2021) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காக எஸ்.சி மற்றும் எஸ்.டி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்த அமைப்பு, சமூகம் மற்றும் பொருளாதார நீதி தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருவதுடன் டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகளைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  கல்வி, தொழில் முனைவு, புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் அரசியல் சாசன உரிமைகள் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படுவதற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சமூகத்தின் தார்மீக மனசாட்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பாபா சாஹேப் விரும்பியதாகவும் குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

சட்டங்களால் மட்டும் உரிமைகளை பாதுகாத்துவிட முடியாது என்று அடிக்கடி கூறிவந்த அவர், சமுதாயத்தில் தார்மீக மற்றும் சமூக விழிப்புணர்வு தேவை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777163

 

  ****



(Release ID: 1777375) Visitor Counter : 226