சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூன்றாம் பாலினத்தவரின் நிலையை மேம்படுத்துதல்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்குமிடங்கள்
Posted On:
30 NOV 2021 4:26PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திரு ஏ நாராயணசாமி மற்றும் செல்வி பிரதிமா பௌமிக் ஆகியோர் கீழ்காணும் தகவல்களை அளித்தனர்.
மூன்றாம் பாலினத்தவரின் நிலையை மேம்படுத்தும் வகையில், "திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019"-ஐ அமைச்சகம் இயற்றியது. அதன் விதிகள் 10 ஜனவரி, 2020 முதல் நடைமுறைக்கு வந்தன. திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள் 29 செப்டம்பர், 2020 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான கொள்கைகள், திட்டங்கள், சட்டம் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கவுன்சில் 21 ஆகஸ்ட், 2020 அன்று உருவாக்கப்பட்டது.
மூன்றாம் பாலினத்தவருக்கான தேசிய போர்ட்டலை நவம்பர் 25, 2020 அன்று அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. எந்தவொரு மூன்றாம் பாலின விண்ணப்பதாரரும், அலுவலகத்துடன் எந்தவித நேரடி தொடர்பும் இல்லாமல் அடையாளச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையைப் பெறலாம்.
கரிமா கிரஹ் எனும் பெயரில் மூன்றாம் பாலினத்தவருக்கான 12 தங்குமிடங்களை தொடங்கும் பணியை அமைச்சகம் ஆரம்பித்துள்ளது. இந்த தங்குமிடங்களை அமைப்பதற்காக சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாதிரி தங்குமிடங்கள் உள்ளன.
இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பரிவாரா, தல்வாராவை மட்டும் நீக்குமாறு பழங்குடியினர் நல அமைச்சகத்திடம் இருந்து அமைச்சகம் கோரிக்கையைப் பெற்றுள்ளது.
அரசியலமைப்பின் 343ஏ(2) பிரிவின்படி, குடியரசுத் தலைவரின் அறிவிப்புக்கு பின்னர், நாடாளுமன்றம் மட்டுமே மத்தியப் பட்டியலில் மாற்றங்கள் செய்யமுடியும்.
தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நகராட்சி முன்கள வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக - துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்குவது, சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்வது, ஊரடங்கு காரணமாக பணிக்கு வராத சுழல் ஏற்பட்டால் கூட தொடர்ந்து ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவலின் போது பாதுகாப்பான நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்கும், கழிவுகளை பாதுகாப்பாக சேகரித்து அகற்றுவதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது நாட்டில் இன்னும் நிலவும் ஒரு சமூகத் தீமையாகும், அதை சமூக இயக்கங்கள் மூலம் ஒழிக்க முடியும். தீண்டாமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், அனைவரும் முன்னேறுவதற்கான சமதளத்தை வழங்குவதன் மூலமும், அனைவருக்கும் சமமான பொருளாதார மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் இந்த முயற்சிக்கு அமைச்சகம் பங்களிக்கிறது. சாதிகளுக்கு இடையேயான திருமணங்களை அமைச்சகம் ஊக்குவிக்கிறது.
பட்டியல் பிரிவினர்/பழங்குடியினர் சட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு 49608 வழக்குகளும், 2020-ம் ஆண்டு 53886 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிசிஆர் சட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு 16 வழக்குகளும், 2020-ம் ஆண்டு 25 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்வியின் அகில இந்திய ஒதுக்கீட்டில் (நீட் உட்பட) சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அரசாங்கத்தால் மிக சமீபத்தில் அதாவது ஆகஸ்ட் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை.
அரசியலமைப்பின் பிரிவு 338பி (5)-ன் விதிகளின்படி, சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் விசாரிக்கவும், கண்காணிக்கவும், உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பான குறிப்பிட்ட புகார்களை விசாரிக்கவும் தேசிய பின்தங்கிய பிரிவினர் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குறைகள் இருப்பின் தேசிய பின்தங்கிய பிரிவினர் ஆணையத்தை அணுகலாம்.
மூத்த குடிமக்களின் நலனுக்கான அடல் வயோ அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ், 2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளில் பீகாருக்கு வெளியிடப்பட்ட நிதி விவரங்கள் பின்வருமாறு:
மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் பீகாருக்கு 2018-19-ல் ரூ 22.92 லட்சம் வெளியிடப்பட்டு 150 பேர் பயனடைந்துள்ளனர், 2020-21-ல் ரூ 28.35 லட்சம் வெளியிடப்பட்டு 50 பேர் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டத்தின் கீழ் பீகாருக்கு 2019-20-ல் ரூ 150 லட்சம் வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776508
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776478
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776477
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776458
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776457
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776456
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776455
*****
(Release ID: 1776612)
Visitor Counter : 2094