சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2017-18-ம் வருடத்திற்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் அறிக்கை வெளியீடு- சுகாதாரத்திற்கான அரசின் செலவுகள் அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 29 NOV 2021 1:05PM by PIB Chennai

2017-18-ம் ஆண்டிற்கான இந்தியாவிற்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் அறிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் இன்று வெளியிட்டார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தால் 2014-ல் தேசிய சுகாதார கணக்குகள் தொழில்நுட்ப செயலகமாக நியமிக்கப்பட்ட தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் தயாரித்த ஐந்தாவது தொடர்ச்சியான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் அறிக்கை இதுவாகும்.

உலக சுகாதார அமைப்பு வழங்கிய சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார கணக்குகளின் அமைப்பு 2011-ன் அடிப்படையில் கணக்கியல் கட்டமைப்பைப் பயன்படுத்தி தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

2017-18-ம் ஆண்டிற்கான மதிப்பீடுகள், சுகாதாரத்திற்கான அரசு செலவினங்கள் அதிகரித்து வருவதைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பொது சுகாதார முறையின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதையும் காட்டுகின்றன.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதாரச் செலவினத்தின் பங்கு 1.15% (2013-14) ஆக இருந்து 1.35% (2017-18) ஆக அதிகரித்துள்ளது.

மொத்த சுகாதார செலவினத்தில் அரசு சுகாதார செலவினத்தின் பங்கு 28.6% (2013-14) ஆக இருந்து 40.8% ஆக (2017-18) அதிகரித்துள்ளது.

2013-14 முதல் 2017-18 வரை தனிநபர் செலவினம் ரூ 2336-ல் இருந்து ரூ 2097 ஆக குறைந்துள்ளது என்று தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் அறிக்கை தெரிவிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கும், கீழ்காணும் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776046

**********


(रिलीज़ आईडी: 1776280) आगंतुक पटल : 303
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Malayalam , Telugu , Bengali , English , Urdu , हिन्दी , Punjabi