தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘இந்த வருடத்திற்கான திரையுலக ஆளுமை’ விருது பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது
“ஒரு வானம் குறைவாக உள்ளது, மேலும் வானங்களை கொண்டு வாருங்கள்...” கோவாவில் நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்வில் 'இந்த ஆண்டின் சிறந்த திரையுலக ஆளுமை' விருது வழங்கப்பட்டபோது புகழ்பெற்ற பாடலாசிரியரும் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளருமான திரு பிரசூன் ஜோஷி கூறியது இதுதான். .
திரையுலகம், கலாச்சாரம் மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த கலைப் பணிகளுக்கு திரு ஜோஷி ஆற்றிய பங்களிப்புக்காக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
இந்தியாவின் பன்முகத்தன்மை உண்மையிலேயே அற்புதமானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு ஜோஷி, அனைத்துப் பிரிவினரும் தங்கள் கதைகளைச் சொல்வதற்கு ஒரு தளம் இல்லையென்றால், இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மை சினிமாவில் வெளிப்பட்டிருக்காது என்றார். இந்த ஆண்டின் 75 சிறந்த படைப்பாளிகளின் முன்முயற்சியின் மூலம் அத்தகைய தளத்தை வழங்க முயற்சித்ததற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழாவை அவர் பாராட்டினார்.
திரைப்படங்கள், தனித்துவமான தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் சமூகம் தொடர்பான கதைகள் ஆகியவற்றில் அவரது ஆத்மார்த்தமான மற்றும் சிந்திக்கத்தூண்டும் எழுத்துகளுக்காக பரவலாக அறியப்படும் திரு ஜோஷி, பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய விருதுகளை வென்றவர்.
“இளம் உள்ளங்கள் குழப்ப நிலையைக் கொண்டாடத் தொடங்க வேண்டும். குழப்பம் என்பது ஒரு சிறந்த நிலை. அதே சமயம், அது மிகவும் அசௌகரியம் தரக்கூடியது, ஆனால் சிறந்த சிந்தனைகள் குழப்பத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன,” என்றார் அவர்.
சிறந்த சினிமாவுக்கு குறுக்குவழி எதுவும் இல்லை, எனவே குறுக்குவழியில் முன்னேறி விடலாம் என்று திரைப்பட இயக்குநர்கள் ஒருபோதும் நினைக்க வேண்டாம் என்று அவர் ஆர்வமுள்ள இயக்குநர்களை எச்சரித்தார். திரைப்படத் தயாரிப்பில் வெற்றி என்பது வடிவமைப்பால் இருக்க வேண்டும், வாய்ப்பு கிடைப்பதால் அல்ல என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776061
****
(Release ID: 1776161)
Visitor Counter : 223