உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

குஷிநகர் விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடக்கம்

Posted On: 27 NOV 2021 3:28PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட குஷிநகர் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. 2021 நவம்பர் 26 அன்று தில்லி மற்றும் குஷிநகருக்கு இடையே உடானின் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் முதல் விமானம் இயக்கப்பட்டது.

 

2021 அக்டோபர் 20 அன்று குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

குஷிநகர் ஒரு சர்வதேச புத்த புனித யாத்திரை தலமாகும். கௌதம புத்தர் இங்குதான் மகாபரிநிர்வாணம் அடைந்தார். லும்பினி, சாரநாதந்த் கயா ஆகிய புனித யாத்திரை தலங்களைக் கொண்ட புத்த வட்டாரத்தின் மையப் புள்ளியும் இந்தப் பகுதி தான்.

 

இந்த பிராந்தியத்தை தேசிய மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் யாத்ரீகர்களுடன் குஷிநகர் விமான நிலையம் நேரடியாக இணைக்கும்.

 

குஷிநகர் விமான நிலையத்தை 3600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனைய கட்டிடத்துடன் ரூ 260 கோடி மதிப்பீட்டில் உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையம் உருவாக்கியுள்ளது. கூட்ட நேரத்தின் போது 300 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775572

******



(Release ID: 1775667) Visitor Counter : 217