புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“பெருங்கடல் சேவைகள், மாதிரியாக்கம், பயன்பாடு, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம் (O-SMART)” திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்த திட்டம் ரூ.2,177 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

Posted On: 24 NOV 2021 3:39PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில்,  பெருங்கடல் சேவைகள், மாதிரியாக்கம், பயன்பாடு, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம் (O-SMART) எனப்படும் மூலத் திட்டத்தை, 2021-26 ஆம் ஆண்டு வரை ரூ.2,177 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெருங்கடல் தொழில்நுட்பம், பெருங்கடல் மாதிரியாக்கம் மற்றும் ஆலோசனை சேவைகள் (OMAS), பெருங்கடல் கூர்நோக்கு கட்டமைப்பு (OON), பெருங்கடல் உயிர்வாழா வளங்கள், ஆழ்கடல் உயிர்வாழ் வளங்கள் மற்றும் சூழலியல், கடலோர ஆராய்ச்சி மற்றும் செயல்பாடு மற்றும் ஆராய்ச்சிக் கலன்கள் பராமரிப்பு போன்ற ஏழு துணைத் திட்டங்களை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்படும்

அடுத்த ஐந்தாண்டுகளில் (2021-26) இந்த திட்டம் ஆழ்கடல் பகுதியில் பயன்படுத்தக்கூடிய துல்லியமான தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் நடவடிக்கைகளை வலுப்படுத்தி விரிவாக செயல்படுத்த  வழிவகுக்கும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774579(Release ID: 1774648) Visitor Counter : 72