குடியரசுத் தலைவர் செயலகம்
2020 ஆம் ஆண்டுக்கான தீரச் செயல் விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்
Posted On:
22 NOV 2021 2:47PM by PIB Chennai
பாதுகாப்புத் துறைக்கான விருதுகள் வழங்கும் முதற்கட்ட விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 22, 2021) காலை நடைபெற்றது.
இதில் தீரச்செயல்களுக்கான விருதுகளையும், சிறப்புமிக்க சேவைகள் செய்ததற்கான பதக்கங்களையும் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
வீர் சக்ரா விருது விமானப்படை விமானிகள் அணி கேப்டன் வர்த்தமான் அபிநந்தனுக்கு வழங்கப்பட்டது. 2019 பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானத்தை இடைமறித்து விரட்டி தீரச்செயல் புரிந்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கீர்த்தி சக்ரா விருது மறைவுக்குப் பின் சேப்பர் பிரகாஷ் ஜாதவுக்கும், சிஆர்பிஎஃப் துணை தளபதி ஹர்ஷ்பால் சிங்குக்கும் வழங்கப்பட்டது.
சௌரிய சக்ரா விருது 10 பேருக்கும், பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் 14 பேருக்கும், அதி விசிஷ்ட் சேவா பதக்கம் 26 பேருக்கும், உத்தம் யுத் சேவா பதக்கம் 2 பேருக்கும் வழங்கப்பட்டன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773948
********
(Release ID: 1774015)
Visitor Counter : 229