ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

5 ஆண்டுகளை நிறைவு செய்தது பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் : 1.63 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 20 NOV 2021 12:56PM by PIB Chennai

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று வீட்டு வசதி தினம் கொண்டாடப்படுகிறது. இதைக் கொண்டாடும் வகையில்  பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பூமி பூஜை, கிரகபிரவேசம், மாதிரிவீடுகளை பயனாளிகள் பார்வையிடுதல் மற்றும் அவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் குறித்து தெரிவிப்பது போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனஅனைவருக்கும் வீடு என்ற உயர்ந்த எண்ணத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்ய, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம்மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வரை 1.63 கோடி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2021-22ம் நிதியாண்டில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்ளுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை ரூ.7,775.63 கோடி. திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1,47,218.31 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773447

------


(रिलीज़ आईडी: 1773467) आगंतुक पटल : 390
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu