பிரதமர் அலுவலகம்

பூர்வாஞ்சல் விரைவுச்சாலை திறப்பு விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 16 NOV 2021 5:59PM by PIB Chennai

பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ ஜெய்!

காலநேமியை பகவான் அனுமன் கொன்ற மண்ணின் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். 1857-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் இப்பகுதி மக்கள் ஆங்கிலேயர்களை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடினர். இந்த நிலத்தில் சுதந்திரப் போராட்டத்தின் மணம் வீசுகிறது. கொய்ரிபூர் போரை யாரால் மறக்க முடியும்? நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பூர்வாஞ்சல் விரைவுச்சாலை இன்று இந்தப் புண்ணிய பூமிக்குக் கிடைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் அவர்களே, .பி.யின் முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, .பி., பாஜக தலைவர் திரு ஸ்வதந்திர தேவ் அவர்களே, .பி. அரசின் அமைச்சர்கள் திரு ஜெய்பிரதாப் சிங் அவர்களே மற்றும் திரு தரம்வீர் பிரஜாபதி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகோதரியான மேனகா காந்தி அவர்களே, மற்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் என் அன்பு சகோதர சகோதரிகளே!

.பி. மற்றும் அதன் மக்களின் திறன் குறித்து உலகம் முழுவதும் உள்ள யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்கள் சுல்தான்பூருக்கு வந்து நேரில் பார்க்கலாம். மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் நிலமாக இருந்த இடத்தில் இப்போது ஒரு நவீன விரைவுச் சாலை செல்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டியபோது, ​​ஒரு நாள் விமானத்தில் இங்கு இறங்குவேன் என்று நான் நினைத்ததில்லை. இந்த விரைவுச் சாலை உத்தரப் பிரதேசத்தை விரைவான வேகத்தில் சிறந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த விரைவுச்சாலை .பி.யின் வளர்ச்சிக்கான அதிவேக நெடுஞ்சாலை. இது .பி.யின் முன்னேற்றத்தின் அதிவேக நெடுஞ்சாலை. இது ஒரு புதிய .பி.யின் விரைவுச்சாலை. இது .பி.யின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் அதிவேக நெடுஞ்சாலை. .பி.யில் உள்ள நவீன வசதிகளின் பிரதிபலிப்பே இந்த விரைவுச்சாலை. இந்த விரைவுச் சாலை .பி.யின் வலுவான லட்சியத்தின் புனித வெளிப்பாடாகும். .பி.யில் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டதற்கு இந்த விரைவுச் சாலை ஒரு வாழும் சான்றாகும். இது .பி.யின் பெருமையும் அதிசயமும் ஆகும். இன்று பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை உத்தரப்பிரதேச மக்களுக்கு அர்ப்பணிப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன்.

நண்பர்களே,

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சமச்சீரான வளர்ச்சி அவசியம். சில பிராந்தியங்கள் வளர்ச்சிப் பந்தயத்தில் முன்னோக்கிச் செல்லும் போது, சில பகுதிகள் பல தசாப்தங்களாக பின்தங்குவது எந்த நாட்டிற்கும் நல்லதல்ல. இந்தியாவின் கிழக்குப் பகுதியும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் நாட்டின் வளர்ச்சியில் இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் வேண்டிய அளவுக்குப் பலன் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அரசியல் காரணமாகவும், அரசுகள் நீண்ட காலமாக செயல்பட்ட விதத்திலும் .பி.யின் ஒட்டு மொத்த வளர்ச்சி மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. .பி.யின் இந்தப் பகுதி மாஃபியாவிடமும், அதை சார்ந்தோர்கள் கைகளிலும் சிக்கி வறுமையில் தள்ளப்பட்டது.

இப்பகுதி வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்காக .பி.யின் ஆற்றல் மிக்க மற்றும் கர்மயோகி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், அவரது குழுவினர் மற்றும் .பி. மக்களை நான் வாழ்த்துகிறேன். இந்த அதிவேக நெடுஞ்சாலைக்காக நிலம் வழங்கிய எனது விவசாய சகோதர சகோதரிகள், வியர்வை சிந்திய தொழிலாளர்கள் மற்றும் திறமையான பொறியாளர்களை நான் வாழ்த்துகிறேன்.

சகோதர சகோதரிகளே,

நமது தேசிய பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாட்டின் வளமும் முக்கியமானது. பூர்வாஞ்சல் விரைவுச் சாலை அவசரகாலத்தில் நமது விமானப் படைக்கு எப்படிப் புதிய பலமாக மாறியுள்ளது என்பதை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப் போகிறோம். இன்னும் சிறிது நேரத்தில், நமது போர் விமானங்கள் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் தரையிறங்கும். பல தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை புறக்கணித்தவர்களுக்கு இந்த விமானங்களின் ஒலி கர்ஜனையாக இருக்கும்.

நண்பர்கள்,

உத்தரப் பிரதேசத்தின் வளமான நிலம், அதன் மக்களின் கடின உழைப்பு மற்றும் திறமைகள் தனித்துவமானது. இவ்வளவு பெரிய பகுதி கங்கை மற்றும் பிற நதிகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்த சூழ்நிலை, .பி.யை சிலர் ஏன் தண்டிக்கிறார்கள், என்ன காரணம் என்று யோசிக்க வைத்தது. 2014-ம் ஆண்டு, நீங்கள் அனைவரும், உத்தரப் பிரதேசம் மற்றும் இந்தியா என்ற மகத்தான பூமிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தபோது, ​​​​.பி.யின் வளர்ச்சியை ஒரு எம்.பி.யாகவும் 'முதன்மை சேவகன்ஆகவும் எனது கடமையாக கருதினேன்.

.பி.க்காக பல முயற்சிகளை தொடங்கினேன். ஏழைகளுக்கு நல்ல வீடுகள் கிடைக்க வேண்டும், கழிவறைகள் அமைக்க வேண்டும், பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது, அனைவரது வீடுகளிலும் மின்சாரம் இருக்க வேண்டும்; இது போன்ற பல பணிகள் இங்கு செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால், அப்போது .பி.யில் இருந்த அரசு எனக்கு ஆதரவளிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், பொதுவெளியில் என் அருகில் நின்றால் கூட தங்களின் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்று அஞ்சினார்கள். நான் இங்கு எம்.பி.யாக வரும்போது, ​​விமான நிலையத்தில் என்னை வரவேற்க வருவார்கள், அதன் பின் விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.

யோகி அவர்கள் பதவியேற்பதற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் மக்களால் அகற்றப்படும் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அவர்கள் மக்களுக்கு அநீதி இழைத்தனர், வளர்ச்சியில் பாரபட்சம் காட்டினர் மற்றும் அவர்களின் குடும்ப நலன்கள் மீது கவனம் செலுத்தினர். 2017-ல் நீங்கள் அறுதிப் பெரும்பான்மையை அளித்ததன் மூலம், யோகி அவர்களுக்கும் மோடிக்கும் உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள்.

இன்று .பி.யில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளைப் பார்க்கும்போது, ​​இந்தப் பகுதியின் எதிர்காலம் மாறத் தொடங்கியுள்ளது, வேகமாக மாறப் போகிறது என்று சொல்லலாம். .பி.யில் முன்பு மின்வெட்டு ஏற்பட்டதை யாரால் மறக்க முடியும்? உங்களுக்கு நினைவிருக்கிறதா இல்லையா? .பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததை யாரால் மறக்க முடியும்? .பி.யில் மருத்துவ வசதிகளின் நிலை என்ன என்பதை யாரால் மறக்க முடியும்? .பி.யில், சாலைகளில் எங்கும் செல்ல முடியாத நிலை, மக்கள் சூறையாடப்பட்டனர். இப்போது கொள்ளையடித்தவர்கள் சிறையில் உள்ளனர். .பி.யில் கொள்ளைகளுக்குப் பதிலாக புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. .பி.யில் கடந்த நான்கரை ஆண்டுகளில், கிழக்கு மற்றும் மேற்கில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் புதிய சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு புதிய சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இப்போது உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு, உத்திரப் பிரதேச அரசின் தீவிர பங்கேற்புடன், .பி.யில் வளர்ச்சி கனவு நனவாகும் என்று தெரிகிறது. இன்று .பி.யில் புதிய மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மற்றும் நவீன கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது, இன்று பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை உங்களிடம் ஒப்படைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

சகோதர சகோதரிகளே,

ஏழை மற்றும் நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு இந்த விரைவுச் சாலை பயனளிக்கும். தொழிலாளர் வர்க்கம் மற்றும் தொழில்முனைவோர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என ஒவ்வொருவரும் பயனடைவார்கள். இந்த சாலை கட்டுமானத்தில் இருந்தபோது ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இது வேலை கொடுத்தது, இப்போது அது தயாராக இருப்பதால் பல லட்சக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்க வழிவகுக்கும்.

நண்பர்களே,

.பி. போன்ற ஒரு பரந்த மாநிலத்தில் நகரங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டிருந்தன என்பதே உண்மை. வேலை நிமித்தமாகவோ, உறவினர்களை சந்திப்பதற்காகவோ பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், முறையான இணைப்பு வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டனர். கிழக்குப் பகுதி மக்களுக்கு லக்னோவை அடைவது மகாபாரதத்தை வென்றது போல் இருந்தது. முந்தைய முதலமைச்சர்களுக்கு அவர்களின் குடும்பங்கள் வாழ்ந்த இடங்களில் மட்டும் வளர்ச்சி இருந்தால் போதுமாக இருந்தது. ஆனால் இன்று மேற்குலகுக்கு எவ்வளவு அங்கீகாரம் இருக்கிறதோ அதே அளவு பூர்வாஞ்சலுக்கும் முன்னுரிமை இருக்கிறது. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே இந்த இடைவெளியைக் குறைத்து, .பி.யை ஒன்றோடொன்று இணைக்கிறது. இந்த விரைவுச் சாலை மூலம், ஆவாத், பூர்வாஞ்சல் மற்றும் பீகார் மக்களும் பயனடைவார்கள். தில்லியில் இருந்து பீகாருக்கான பயணம் எளிதாகும்.

உத்தரப்பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு சிறந்த இணைப்பு அவசியம். .பி.யின் ஒவ்வொரு மூலையையும் இணைக்க வேண்டும். .பி.யில் விரைவுச் சாலைகள் தயாராகி வரும் நிலையில், தொழில்துறை வழித்தடத்திற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மிக விரைவில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையைச் சுற்றி புதிய தொழில்கள் வரத் தொடங்கும். வரும் நாட்களில், இந்த விரைவுச் சாலைகளை ஒட்டி அமைந்துள்ள நகரங்களில், உணவு பதப்படுத்துதல், பால், குளிர்பதனக் கிடங்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் சேமிப்பு, தானியங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் இதர விவசாயப் பொருட்கள் தொடர்பான தயாரிப்புகளின் பணிகள் வேகமாக அதிகரிக்கும். .பி.யின் தொழில்மயமாக்கலுக்கு திறமையான மனிதவளம் அவசியம். எனவே, பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் ஐடிஐ மற்றும் பிற பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களும் நிறுவப்படும்.

.பி.யில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு வழித்தடமும் இங்கு புதிய வேலைவாய்ப்புகளை கொண்டு வரப் போகிறது. .பி.யில் நடைபெறும் இந்த உள்கட்டமைப்பு பணிகள், எதிர்காலத்தில் பொருளாதாரத்திற்கு புதிய உயரங்களை வழங்கும்.

.பி.யில் உள்ள இரட்டை என்ஜின் அரசு .பி.யில் உள்ள சாமானிய மக்களை தங்கள் குடும்பமாக கருதி இன்று செயல்பட்டு வருகிறது. புதிய தொழிற்சாலைகள் உருவாகும் சூழல் உருவாகி வருகிறது. இந்த தசாப்தத்தின் தேவைகளை மனதில் கொண்டு, வளமான உத்தரப்பிரதேசத்தை உருவாக்க உள்கட்டமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன.

.பி.யின் அனைத்து துறை வளர்ச்சிக்காக அரசு இரவும் பகலும் உழைத்து வருகிறது. இணைப்பு வசதிகளுடன், .பி.யில் உள்கட்டமைப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 30 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு .பி அரசு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டு லட்சக்கணக்கான சகோதரிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க இரட்டை இயந்திர அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. சேவை மனப்பான்மையுடன் தேசத்தைக் கட்டியெழுப்புவது நமது கடமை, அதையே செய்வோம்.

என்னுடன் இணைந்து சொல்லுங்கள்

பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ ஜெய்!

மிக்க நன்றி!

குறிப்பு: இது பிரதமர் இந்தியில் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772344

 

-------



(Release ID: 1772989) Visitor Counter : 174