சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிரதமரின் ஒவ்வொரு வீட்டிற்கும் தடுப்பூசியை கொண்டு செல்லும் இயக்கத்தை வலுப்படுத்த தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகளுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

Posted On: 16 NOV 2021 2:17PM by PIB Chennai

"தடுப்பூசி தொடர்பான சாதனைகள் அரசுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் சொந்தமானவை, என்று பிரதமர் திரு நரேந்திர மோடி  உறுதிபட தெரிவித்துள்ளார். கூட்டு இலக்கை அடைய அனைத்து பங்குதாரர்களும் தங்கள் நிபுணத்துவம் மற்றும் திறனுக்கு ஏற்ப செயல்படுவது ஜனநாயகத்தின் சாராம்சம் ஆகும், என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று கூறினார்.

 

நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசியை மேலும் எடுத்து செல்வதில் அரசுக்கு உதவும் பல்வேறு பங்குதாரர்களின் பிரதிநிதிகளுடன் இன்று உரையாடியபோது இவ்வாறு அவர் கூறினார்.

 

கொவிட்-19-க்கு எதிரான தடுப்பூசியை கடைசி குடிமகன் வரை கொண்டு சேர்ப்பதன் மூலம் கொவிட்-19-லிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் முயற்சியில் கைகோர்க்க அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை அவர் வரவேற்றார்.

 

சமூக விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கும் உழைக்குமாறு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

 

அரசு முயற்சிகளை தங்கள் சொந்த முயற்சியால் வலுப்படுத்தக்கூடிய பகுதிகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது: தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரத்தைப் பற்றிய தகவல்களைப் பரப்பலாம்.

நேர்மறையான செய்திகளை கொண்டு சேர்க்க ஒலி-ஒளி உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல், தேசிய/மாநில/மாவட்ட அளவில் முன்னணி மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து செயல்படுதல், கொவிட்-19 தடுப்பூசி பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்த்தல் உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபடலாம். கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதைகள், தவறான எண்ணங்கள் மற்றும் சந்தேகங்களை அவர்கள் அகற்றலாம். இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசு நடவடிக்கைகளுக்கு இவ்வமைப்புகள் வலு சேர்க்கலாம்.

 

கொவிட் மேலாண்மைக்கான தடுப்பூசிகள், தகவல் மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வழங்கியதற்காக மத்திய சுகாதார அமைச்சருக்கு பங்குதாரர்கள் நன்றி தெரிவித்தனர்.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772268

 

****



(Release ID: 1772417) Visitor Counter : 166