பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பத்ம விருது பெற்ற திரு.பிரன் குமார் பசக் வழங்கிய பரிசுக்கு பிரதமர் நன்றி

प्रविष्टि तिथि: 13 NOV 2021 9:08AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரபல நெசவாளரும், பத்ம விருது பெற்றவருமான திரு.பிரன் குமார் பசக்-உடனான தமது கலந்துரையாடலை நினைவு கூர்ந்துள்ளதுடன் அவர் அளித்த பரிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

திரு.பிரன் குமார் பசக் மேற்கு வங்க மாநிலம் நாடியாவைச் சேர்ந்தவர். மிகச் சிறந்த நெசவாளரான அவர், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் பல்வேறு அம்சங்களை தாம் உருவாக்கிய சேலைகளில் சித்தரித்துள்ளார். பத்ம விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடிய போது அவர் எனக்கு அளித்த பரிசை நான் போற்றி மகிழ்கிறேன்”.

*****


(रिलीज़ आईडी: 1771396) आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam