நிதி அமைச்சகம்
முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்களுடன் வரும் திங்களன்று மத்திய நிதி அமைச்சர் உரையாடவுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2021 4:25PM by PIB Chennai
முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (2021 நவம்பர், 15) அன்று காணொலி மூலம் உரையாடவுள்ளார்.
மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிதிச் செயலாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
தேசத்திற்கான கூட்டு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தவும், நாட்டின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் நிதி அமைச்சர் முயற்சி செய்து வருகிறார்.
இந்த உரையாடலின் வாயிலாக, முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்கான தங்கள் யோசனைகளையும் பார்வையையும் மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளலாம், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா மாறுவதற்கான பாதையில் பரந்த ஒருமித்த கருத்துக்கு இது வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1771205&RegID=3&LID=1
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1771272)
வருகையாளர் எண்ணிக்கை : 245