பிரதமர் அலுவலகம்

ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை, அமர்வு I : உலகளாவிய பொருளாதாரம் மற்றும் உலகளாவிய சுகாதாரம்

Posted On: 30 OCT 2021 11:55PM by PIB Chennai

மேன்மைமிகு தலைவர்களே, 

உலகளாவிய கொரோனா பெருந்தொதொற்றை எதிர்த்துப் போராட, 'ஒரே பூமி - ஒரு ஆரோக்கியம்' என்ற தொலைநோக்கு லட்சியத்தை உலகிற்கு முன்வைத்துள்ளோம். எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள உலகிற்கு பெரும் பலமாக இந்த லட்சியம் அமையும். 

மேன்மைமிகு தலைவர்களே, 

உலகின் மருந்தகமாக செயல்பட்டு வரும் இந்தியா, 150 நாடுகளுக்கு மருந்துகளை வழங்கியுள்ளது.

மேன்மைமிகு தலைவர்களே, 

நம்பகமான விநியோக சங்கிலியின் அவசியத்தை இந்த பெருந்தொற்று உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியா நம்பகமான உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது. 

மேன்மைமிகு தலைவர்களே, 

கொவிட் காரணமாக பாதிக்கப்படாத வாழ்க்கையின் அம்சம் எதுவும் இல்லை என்றே கூறலாம். இத்தகைய கடினமான சூழ்நிலையிலும் கூட, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம்-பிபிஓ துறை ஒரு நொடி கூட இடையூறுகளை அனுமதிக்கவில்லை, முழு உலகத்திற்கும் ஆதரவளிக்க 24 மணி நேரமும் உழைத்தது. இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளியின் கடமையை எவ்வாறு செய்தது என்பது குறித்து கூட்டங்களின் போது உங்களைப் போன்ற தலைவர்கள் பாராட்டுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

மேன்மைமிகு தலைவர்களே, 

பொருளாதார மீட்சிக்கு சர்வதேச செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும். இதற்காக, பல்வேறு நாடுகளால் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களின் பரஸ்பர அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும். 

மேன்மைமிகு தலைவர்களே, 

ஐந்து பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை அடுத்த ஆண்டு உலகிற்கு வழங்க இந்தியா தயாராகி வருகிறது என்பதை இன்று, இந்த ஜி20 தளத்தில், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவின் இந்த அர்ப்பணிப்பு, கொரோனாவின் உலகளாவிய பரவலைத் தடுப்பதில் பெரும் பங்காற்றும். எனவே, இந்திய தடுப்பூசிகளை சர்வதேச சுகாதார அமைப்பு விரைவில் அங்கீகரிக்க வேண்டியது அவசியம்.

குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும். 

*******

(Release ID: 1767999) 

 



(Release ID: 1770039) Visitor Counter : 162