தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கான ஊடகப் பதிவு ஆன்லைன் மூலம் தொடக்கம்
கோவாவில் நடைபெறும் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள், தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இந்த நடைமுறை, காணொலிக் காட்சி மூலம், இந்த திரைப்பட விழாவில் 2021 நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை பங்கேற்க விரும்புபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் கீழ்கண்ட இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம். https://virtual.iffigoa.org
தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் நடைபெறுகிறது. ஏராளமான படங்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன. பத்திரிக்கையாளர் சந்திப்புகள் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதில் பத்திரிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் கேள்வி கேட்கும் வசதிகளும் உள்ளன.
2021 ஜனவரி 1ம் தேதியன்று 21வயதுக்கு மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள், இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கலாம். ஊடகத்துக்கான பதிவு இலவசம். இந்த விழாவில் காணொலி மூலம் கலந்து கொள்ளவதற்கான உள்நுழைவுத் தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த பதிவு மாற்றத்தக்கது அல்ல. மேலும் இந்த பதிவு, காணொலி மூலம் கலந்து கொள்வதற்கு மட்டுமே, திரைப்பட விழாவில் நேரடியாக கலந்து கொள்வதற்கு அல்ல.
52வது இந்திய சர்வதே திரைப்பட விழாவில் நேரடியாக கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யலாம்:
https://my.iffigoa.org/extranet/media/
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1769700.
------
(Release ID: 1769730)
Visitor Counter : 223