பிரதமர் அலுவலகம்
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மற்றும் ஜெர்மனி பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கல் இடையேயான சந்திப்பு
Posted On:
31 OCT 2021 10:30PM by PIB Chennai
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டை ஒட்டி ஜெர்மனி பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கல்லை பிரதமர் திரு நரேந்திர மோடி இத்தாலியின் ரோம் நகரத்தில் 2021 அக்டோபர் 31 அன்று சந்தித்தார்
அவர்களது நீண்ட கால ஒத்துழைப்பு மற்றும் தனிப்பட்ட நட்பை நினைவுகூர்ந்த பிரதமர், ஜெர்மனிக்கு மட்டுமிலலாமல் ஐரோப்பிய மற்றும் உலக அளவில் வழிகாட்டுவதற்காக பிரதமர் மெர்க்கல்லை பாராட்டினார். டாக்டர் மெர்க்கல்லுக்கு அடுத்து அந்த பதவிக்கு வருபவருடன் நெருக்கமான உறவை பேண அவர் உறுதி அளித்தார்.
இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையேயான நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டனர். பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட புதிய துறைகளில் இந்திய-ஜெர்மனி கூட்டை விரிவுபடுத்த அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
டாக்டர் மெர்க்கல்லின் எதிர்காலத்திற்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
******
(Release ID: 1769326)
Visitor Counter : 130
Read this release in:
Punjabi
,
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam