குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
03 NOV 2021 3:27PM by PIB Chennai
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது-
“தீபத்திருநாள் தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரம்பரிய உற்சாகம் மற்றும் ஆர்வத்துடன் கொண்டாப்படும் தீபாவளி ஸ்ரீ ராமர் 14 ஆண்டு வனவாசத்துக்குப் பின் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் அயோத்தியா திரும்பியதுடன் தொடர்புடையது.
தீமையை நன்மை வெற்றிக் கொள்வதைக் குறிக்கும் தீபாவளி, பண்டிகை, ஸ்ரீராமர் வாழ்க்கையின் உன்னத லட்சியமே நமது நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்கிறது.
நமது கலாச்சாரத்தில், ஸ்ரீராமர் உண்மை, தர்மம், தைரியம் மற்றும் இரக்கத்தின் முழு உருவகமாக உள்ளார். மரியாதா புருஷோத்தம் சிறந்த அரசராகவும், கீழ்படிந்த புதல்வராகவும், வெல்ல முடியாத வீரராகவும் மற்றும் அனைவருக்கும் முன்மாதிரியாகவும் மதிக்கப்படுகிறார்.
செழிப்பின் தெய்வம், லட்சுமியின் வழிபாடு தீபாவளிக் கொண்டாட்டத்தில் அடங்கியுள்ளது.
தீபாவளிப் பண்டிகை நமது வாழ்வில் ஒளி, இணக்கம், செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும். இந்தப் பண்டிகை நமது வாழ்க்கையை முழுமை அடையச் செய்யும் உற்சாகத்தைத் தூண்டுகிறது மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.
-----
(रिलीज़ आईडी: 1769314)
आगंतुक पटल : 194