பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி –உக்ரைன் அதிபர் சந்திப்பு

Posted On: 02 NOV 2021 8:05PM by PIB Chennai

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2, 2021 அன்று நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் சந்தித்து பேசினர்.

பிராந்திய வளர்ச்சி, இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளும், கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரித்தல் உட்பட தொற்றுநோய் காலங்களில் மேற்கொண்ட ஒத்துழைப்பு குறித்து அவர்கள் தங்களின் திருப்தியை தெரிவித்தனர்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் தொற்றுநோயின் இரண்டாம் கட்டத்தின் போது இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய மனிதாபிமான செயலுக்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இரு நாட்டின் மக்களுக்கிடையே உள்ள உறவு, குறிப்பாக உக்ரைனின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் படிப்பது சாதகமான சூழல் இரு தலைவர்களும் பேசினர்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணைந்து செயல்பட தயாராக இருப்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்

***



(Release ID: 1769133) Visitor Counter : 207