சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய அளவிலான நிமோனியா தடுப்பூசி விரிவாக்க திட்டம்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடக்கம்
Posted On:
29 OCT 2021 2:20PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்குமான தடுப்பூசி திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான நிமோனியா தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்தார். மக்களிடையே நிமோனியா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் மற்றும் விழிப்புணர்வு தொகுப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
அனைவருக்குமான பயன்பாட்டுக்கு நிமோனியா தடுப்பூசி முதல் முறையாக கிடைக்கப் போகிறது. 5 வயதுக்கு கீழான குழந்தைகளின் இறப்புக்கு நிமோனியா முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில், சுமார் 16 சதவீத குழந்தைகளுக்கு நிமோனியா காரணமாக இறப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் நிமோனியா தடுப்பூசி அறிமுகம், குழந்தைகளின் இறப்பை சுமார் 60 சதவீதம் குறைக்கும். குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவது நமது பொறுப்பு. நிமோனியா தடுப்பூசி குழந்தைகளின் இறப்பு வீதத்தை குறைப்பதோடு, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் உறுதி செய்யும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
****
(Release ID: 1767646)
Visitor Counter : 306