ஆயுஷ்
அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில்முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் திறந்து வைக்கிறார்
Posted On:
26 OCT 2021 11:17AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில்முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அக்டோபர் 29 அன்று திறந்து வைக்கிறார்.
ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேதம் எனும் மையக்கருத்தோடு கொண்டாடப்படும் ஆயுர்வேத தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆயுஷ் துறையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கு அக்டோபர் 30 அன்று நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத துறை பிரதிநிதிகள் இதில் பங்கேற்பாளர்கள்.
இத்துறையில் புது யுக நிறுவனங்களை உருவாக்குவதற்காக ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் மையம் ஒன்று நிறுவப்படும். 16 வயது வரையிலான குழந்தைகளுக்காக அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் பெட்டகம் ஒன்று நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தபப்டும். ஆயுர்வேத உணவு கண்காட்சி நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766504
**********
(Release ID: 1766613)
Visitor Counter : 223