இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபிபா தலைமைச் செயல் அதிகாரி யூரி டிஜார்கஃப்-ஐ மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 25 OCT 2021 6:30PM by PIB Chennai

ஃபிபா தலைமைச் செயல் அதிகாரி யூரி டிஜார்கஃப்-ஐ மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  திரு அனுராக் சிங் தாகூர் புதுதில்லியில் சந்தித்தார்இந்த சந்திப்பின் போது கால்பந்து விளையாட்டை எவ்வாறு ஊக்குவிப்பது கால்பந்து போட்டிகளை அதிக அளவில் நடத்தி விரிவுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்சமீபத்திய வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் விளையாட்டு மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாக  திரு அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார். விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்கும் , பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கும் சமீப காலமாக புதிய உந்துதலைப் பெற்றுள்ளது எனவும் திரு அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.

தனது கால்பந்தாட்ட நுணுக்கங்களையும், அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூருக்கு, திரு யூரி வெளிக்காட்டினார். அதே போல் அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூரும் தனது கால்பந்து திறனை வெளிப்படுத்தினார்.

***


(रिलीज़ आईडी: 1766397) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu