ஜவுளித்துறை அமைச்சகம்

தொழில்நுட்ப ஜவுளி துறையில் திறன் வளர்த்தல்/பயிற்சியை ஐஐடி சென்னை, ஐஐடி ரூர்கி மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் வழங்கவுள்ளன

Posted On: 25 OCT 2021 1:07PM by PIB Chennai

சாலைகள், ரயில்வே, நீர் ஆதாரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் புவிசார்-ஜவுளி பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள வடிவமைத்தல்/நிறுவுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மாதிரி திறன் வளர்த்தல் திட்டத்திற்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி), சென்னை மற்றும் ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களால் (ஐஐடி) இப்பயிற்சி வழங்கப்படும்.

தொடர்புடைய பொறியியல் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் நிறுவனத்தின் இதர மையங்கள்/அலுவலகங்களுடனான ஆலோசனைக்கு பின்னர் இந்த சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுவதை கவனித்து கொள்வார்கள்.

மூன்று பயிற்சிகள் தொடர்புடைய அனைத்து விஷயங்கள் குறித்தும் பெங்களூரு ஐஐஎஸ்சி-யின் பேராசிரியர் ஜி ஐ சிவகுமார் பாபு, சென்னை ஐஐடியின் பேராசிரியர் ராஜகோபால் கர்புரப்பு மற்றும் ரூர்கி ஐஐடியின் பேராசிரியர் சத்யேந்திர மிட்டலுடன் அமைச்சகம் ஒருங்கிணைக்கும்.

ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 75 முதல் அதிகபட்சம் 100 பேர் வரை இருபார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் தலா இரண்டு பிரிவுகளில் பயிற்சி நடத்தபப்டும். சிறப்பு மேம்பாட்டு பயிற்சியை மேலும் தொடர்வது குறித்து தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் அல்லது ஜவுளி அமைச்சகம் ஆய்வு செய்து முடிவெடுக்கும். லாபமில்லா/நஷ்டமில்லா முறையில் மேற்கண்ட நிறுவனங்கள் பயிற்சிகளை வழங்கும். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766265

-----



(Release ID: 1766333) Visitor Counter : 165