ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்ற உள்ளார்
Posted On:
25 OCT 2021 1:11PM by PIB Chennai
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் சர்வதேச அளவில் இந்தியாவின் இடத்தை மேலும் வலுப்படுத்தும் லட்சியத்தின் ஒரு பகுதியாக, 2021 அக்டோபர் 27 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து மருந்துகள் துறை காணொலி வாயிலாக நடத்த உள்ளது.
"மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையிலுள்ள வாய்ப்புகள் மற்றும் கூட்டுகள்" என்பது இந்த உச்சி மாநாட்டின் மையக்கருவாகும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இம்மாநாட்டில் உரையாற்ற உள்ளார்
கீழ்காணும் தலைப்புகளில் நடைபெற உள்ள விரிவான தொழில்நுட்ப அமர்வுகளில் தொழில்துறையினர் பங்கு பெறுவதற்கான வாய்ப்பை இந்த உச்சிமாநாடு வழங்கும்.
அமர்வு 1: உயிரி மருந்துகள் வாய்ப்புகளை பயன்படுத்தி உயிரி மருந்துகள் மையம் எனும் இந்தியாவின் நற்பெயரை உலகில் வலுப்படுத்துதல்
அமர்வு 2: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகள்: இந்திய மருத்துவ உபகரணங்கள் துறையின் வெற்றிக் கதைகள்
அமர்வு 3: தடுப்பு மருந்து இலக்கு: தடுப்பூசி உற்பத்தி திறன்களை முழுவதும் மேம்படுத்துதல்
அமர்வு 4: மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் புது நிறுவனங்களுக்கு நிதி அளித்தல் மற்றும் முதலீடுகளின் எதிர்காலம்
அமர்வு 5: மொத்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற்ற முதலீட்டாளர்களுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்
மருந்துகள் துறைக்காக ரூபாய் 15,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ள நிலையில், 278 நிறுவனங்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766266
******
(Release ID: 1766301)
Visitor Counter : 221