கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேதாஜி சுபாஷ் சந்திர போசால் ஏற்படுத்தப்பட்ட சுதந்திர இந்திய அரசு உருவாக்கத்தின் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது

Posted On: 22 OCT 2021 3:41PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திர போசால் ஏற்படுத்தப்பட்ட சுதந்திர இந்திய அரசு உருவாக்கத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் ஒடிசா, மணிப்பூர், நாகாலாந்து மற்றும் சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டன. 

சுதந்திர இந்தியாவின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் ஏற்படுத்தப்பட்ட சுதந்திர இந்திய அரசு உருவாக்கத்தின் ஆண்டுவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

மணிப்பூரில் உள்ள மொய்ராம் என்ற இடத்தில்தான் இந்திய தேசிய ராணுவம் கடந்த 1944ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம்தேதி முதல் முறையாக மூவர்ண கொடியை ஏற்றியது.  இங்கு இந்திய தேசிய ராணுவம், குடும்ப யாத்திரைகடந்த 10ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்தப்பட்டது. இங்கு நடனம், பாடல்கள் என பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவை இந்திய தேசிய ராணுவத்தின் கொள்கைகளை வெளிப்படுத்தின. இங்குள்ள நினைவுக் கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

இதே போல் நாகாலாந்தின் ருசாசோ கிராமத்தில் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  இந்த கிராமத்தில் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1940ஆம் ஆண்டு தங்கியிருந்தார்.

ஒடிசாவின் கட்டாக் நகரில் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார் . அதனால் இங்கும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேசிய மாணவர் படையினர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ நினைவிடத்தில் இந்தியத் தூதர் மலர்  வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இங்குதான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  கடந்த 1943ஆம்ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சுதந்திர இந்திய அரசு உருவாக்கத்தை அறிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765729

*****************


(Release ID: 1765819) Visitor Counter : 591