தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான ஊடகப் முன்பதிவு தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
20 OCT 2021 1:03PM by PIB Chennai
52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் மாதம் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. கொவிட்-19 தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு காணொலி வழியாகவும், நேரடியாகவும் இந்த விழா நடைபெற உள்ளது.
உலகெங்கிலும் உள்ள உன்னதமான மற்றும் சிறந்த சமகாலத் திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரைப்படத் திறனாய்வாளர்கள், கல்வியாளர்கள் போன்றோரை இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திரையிடல் நிகழ்வுக்குப் பின்னர், திரைப்படம் எடுக்கப்பட்ட யுக்தி, அது குறித்த விளக்கம், விவாத நிகழ்ச்சி, கருத்தரங்கம் போன்றவையும் இந்த விழாவில் இடம்பெறும்.
இந்த 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்பும் ஊடகத்துறையினர் கீழ்க்கண்ட இந்த லிங்க் (https://my.iffigoa.org/extranet/media/) மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஊடகத்துறையினருக்கான அடையாள அட்டை பத்திரிகை தகவல் அலுவலகம் வழிகாட்டுதலின்படி தகுதி உடையவருக்கு வழங்கப்படும்.
இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியின்படி 21 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற திரைப்பட விழாக்களை குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பதிவுசெய்தவராக இருக்க வேண்டும்.
பொதுநலன் கருதி இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர் கட்டாயம் கொரோனா தடுப்பூசியை (இரண்டு டோஸ்களையும்) போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 14-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
****
(रिलीज़ आईडी: 1765288)
आगंतुक पटल : 346