சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 அண்மைத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2021 9:30AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 97.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 229 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.10 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 19,788 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,34,19,749 என அதிகரித்துள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் தற்போது 0.57 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,95,846; கடந்த 220 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.42 சதவீதம்) கடந்த 114 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.29 சதவீதம்) கடந்த 48 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 59.09 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.


(வெளியீட்டு அடையாள எண்: 1764484) வருகையாளர் எண்ணிக்கை : 233
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Telugu , Malayalam