பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) 28 வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 12 OCT 2021 2:00PM by PIB Chennai

வணக்கம்!

உங்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி விழா வாழ்த்துகள்! இந்நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் நாட்டின் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், நீதிபதி திரு. அருண் குமார் மிஸ்ரா, மத்திய உள்துறை இணை அமைச்சர், நித்யானந்த் ராய், மனித உரிமைகள் ஆணையத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையங்களின் தலைவர்கள், மரியாதைக்குரிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உறுப்பினர்கள், ஐ.நா. நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிற பிரமுகர்கள், சகோதர சகோதரிகளே!!

தேசிய மனித உரிமை ஆணையத்தின் 28 வது நிறுவன தினத்தில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவின் விடுதலைப்போராட்ட இயக்கத்திலும் அதன் வரலாற்றிலும் இந்தியாவிற்கு மனித உரிமைகளும் மனித மாண்புகளும் மகத்தான ஊக்கசக்தியாக விளங்குகின்றன என்றார். ஒரு கட்டத்தில் முதலாம் உலகப்போரால் ஒட்டுமொத்த உலகமும் வன்முறையால் சூழப்பட்டிருந்தது. அப்போது ஒட்டுமொத்த உலகத்திற்கும் ‘உரிமைகள் மற்றும் அகிம்சை’ என்றப் பாதையை இந்தியா காட்டியது. இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் நமது பாபுவை மனித உரிமைகள் மற்றும் மனித மாண்புகளின் அடையாளமாகப் பார்த்தது” என்று மகாத்மா காந்தியைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். இந்தியாவின் இந்தக் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆதரவளித்து வலிமை அளிப்பதில் நான் திருப்தி அடைகிறேன்.

நண்பர்களே !

இந்தியா அனைவரையும் ஒன்றாக கருதும் சிறந்தக் கொள்கைகளைப் பின்பற்றும் நாடு. பல நூறு ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய சமத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமமாக எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நண்பர்களே!

சுதந்திரத்திற்குப் பிறகும், இந்தியா தொடர்ந்து ஒரு புதிய முன்னோக்கை, சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் உலகிற்கு ஒரு புதிய பார்வையை அளித்துள்ளது. அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், மனித உரிமைகளை முதன்மையாக வைத்து ஒரு சிறந்த சமுதாயத்தை இந்தியா தொடர்ந்து உருவாக்கும் என்ற நமது நம்பிக்கை நமக்கு உறுதியளிக்கிறது.

நண்பர்களே!

அரசாங்கம் ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதன் பலன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே கிடைத்தால், உரிமைகள் பிரச்சினை நிச்சயமாக எழும். அதனால்தான் ஒவ்வொரு திட்டத்தின் பயன்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று உரையாற்றிய நான், அடிப்படை வசதிகளை 100% பூர்த்தியடையச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். அதன் அடிப்படையில் இப்போது அரசாங்கம் ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு வசதிகளை வழங்கி வருகிறது.

நண்பர்களே!

நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்க்கையை உன்னிப்பாகப் பார்த்தால், அவனது வாழ்க்கை அவனது தேவைகளைப் பற்றியது, அவன் அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் செலவிடுகிறான். தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, அவனால் தனது உரிமைகளைப் பற்றி சிந்திக்கக்கூட முடியாது. ஏழைகளுக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை வழங்குவதற்கு, அவர்களின் தேவைகளை முதலில் நிறைவேற்றுவது மிகவும் முக்கியம். அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போது, ஏழைகள் தங்கள் உரிமைகளைக் கோரலாம். வறுமையின் தீய வட்டத்திலிருந்து வெளியே வந்த பிறகு, அவர்கள் தனது கனவுகளை நிறைவேற்றுவதை நோக்கி நகர்கின்றனர்.

நண்பர்களே !

வங்கிக்குச் செல்ல தைரியம் இல்லாத ஏழை, தனது ஜன் தன் கணக்கைத் திறந்தால், அவருக்கு ஊக்கம் கிடைக்கும், அவருடைய கவுரவம் மேம்படும். டெபிட் கார்டைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாத ஏழைகளுக்கு ரூபே கார்டு கிடைக்கும்போது, அவர்களுடைய கவுரவம் வளர்கிறது. பல தலைமுறைகளாக சொத்தின் உரிமையைப் பெறாத பெண்கள், அவர்களின் பெயரில் அரசு வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வைத்திருக்கிறார்கள், இதனால் அந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கவுரவம் உயர்கிறது.

நண்பர்களே!

இஸ்லாமியப் பெண்களுக்கு முத்தலாக் சட்டத்திற்கு எதிராகப் புதிய உரிமைகளை வழங்கியுள்ளோம். ஹஜ்ஜின் போது இஸ்லாம் பெண்களை மஹ்ராம் (இஸ்லாமிய சட்டப்படி கணவர் அல்லது ஆண் உறவினர் பெண்ணுடன் வர வேண்டும்) கடமையிலிருந்து நமது அரசு விடுவித்துள்ளது.

நண்பர்களே!

பெண்களுக்காக இன்று, பல துறைகள் திறக்கப்பட்டுள்ளன; அவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பாக வேலைச் செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்படுகிறது. பல வளர்ந்த நாடுகள் செயல்படுத்த கடினமாக இருக்கும் போது, அலுவலகத்தில் பணி புரியும்  பெண்களுக்கு 26 வார ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை இந்தியா வழங்குகிறது.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளில் மகள்களின் பாதுகாப்புத் தொடர்பாக பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் 700 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒன்கால் சென்டர் எனப்படும் உதவி மையம்  இயங்குகின்றன, அங்கு பெண்களுக்கு மருத்துவ உதவி, போலீஸ் பாதுகாப்பு, மனநலம் மற்றும் சமூக ஆலோசனை, சட்ட உதவி மற்றும் தற்காலிக தங்குமிடம் ஆகியவை ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரானக் குற்றங்களை விரைந்து விசாரிக்க நாடு முழுவதும் 650 -க்கும் மேற்பட்ட விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பழிப்பு போன்ற கொடூரமானக் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

சமீபத்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் நமது மாற்றுத் திறனாளிச் சகோதர சகோதரிகளின் திறமைகளை நாம் பார்த்தோம். கடந்த ஆண்டுகளில், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கானச் சட்டங்களும் செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர்களுக்குப் பல புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. செவித்திறன் குறைபாடுள்ள நமது மாற்றுத் திறனாளி சகோதரர்கள் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தமிழ்நாட்டில் வெவ்வேறு மொழிகளில் கையொப்பமிட்டனர். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, இந்தியா புதிய சட்டம் மூலம் ஒரே மாதிரியான கையொப்பக் கொள்கையை உருவாக்கியுள்ளது. சமீபத்தில், நாட்டின் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு நாட்டின் முதல் சைகை மொழி அகராதி மற்றும் ஆடியோப் புத்தக வசதிகள் கிடைக்கின்றன, இதனால் அவர்கள் இணைய வாயிலாகவும் கற்க முடியும். அதேபோல, திருநங்கைகளுக்குச் சிறந்த வசதிகள் மற்றும் சம வாய்ப்புகளை வழங்குவதற்காக திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்நூற்றாண்டின் மிகப்பெரிய பேரழிவானக் கொரோனா என்னும் மிகப்பெரியத் தொற்றுநோயை நம் நாடு எதிர்கொண்டது, இது உலகின் முக்கிய நாடுகளைக்கூட விட்டு வைக்கவில்லை. இதுபோன்றக் கடினமானக் காலங்களில் கூட, ஒரு ஏழைக் கூட பசியால் வாடக்கூடாது என்பதை இந்தியா உறுதிப்படுத்த முயன்றது. உலகின் முக்கிய நாடுகள் கூட சிரமப்பட்ட அதே சமயம், இந்தியா இன்றும் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவுத் தானியங்களை வழங்கி வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 'ஒரே நாடு- ஒரே ரேஷன் கார்டு' திட்டமும் தொடங்கப்பட்டது, இதனால் அவர்கள் நாட்டில் எங்கு சென்றாலும் ரேஷனுக்காக அலைய வேண்டியதில்லை.

சகோதர சகோதரிகளே,

இன்று நாட்டின் விவசாயிகள் எந்த மூன்றாம் நபரிடமிருந்தும் கடன் வாங்க வேண்டியக் கட்டாயம் இல்லை; அவர்களுக்கும் கிசான் சம்மான் நிதி, பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் அவற்றை சந்தைகளுடன் இணைப்பதற்கானப் பாலிசிகள் உள்ளன. இந்த முயற்சிகள் சமமாக மனித உரிமைகளை மேம்படுத்துகின்றன.

நண்பர்களே!

மனித உரிமைகள் தொடர்பான மற்றொரு அம்சம் உள்ளது, சமீபகாலமாக சிலபேர் தங்களின் சுயநலன்களுக்காக மனித உரிமைகள் குறித்து தற்போது விளக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறினார். மனித உரிமைகளைச் சிதைத்த இதேபோன்றச் சூழலில் செய்யாத ஒன்றை இப்போதைய சூழலில் செய்யும் மனப்போக்கைக் காணமுடிகிறது என்று அவர் கூறினார். அரசியல் மற்றும் அரசியல் லாப-நஷ்டக் கண்ணாடிக் கொண்டு அவர்கள் பார்க்கும்போது மனித உரிமைகள் மாபெரும் மீறல்களைக் காண்பதாகவும் அவர் கூறினார். “தங்கள் விருப்பம்போல் விளக்கமளிக்கும் இந்தப் போக்கு ஜனநாயகத்தைச் சிதைப்பதற்குச் சமமானதாகும்” என்றும் பிரதமர் எச்சரித்தார்.

நண்பர்களே!

நம்மைப் போலவே மற்றவர்களின் உரிமைகளையும் நாம் கவனிக்க வேண்டும்; மற்றவர்களின் உரிமைகளை நமது கடமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்; மேலும் அனைத்து மனிதர்களிடமும் சீரான பாச மனப்பான்மை இருக்க வேண்டும். மனித உரிமைகள் என்பது உரிமைகளோடு மட்டும் தொடர்புடையது அல்ல நமது கடமைகளோடும் தொடர்புடையவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று பிரதமர் கூறினார். “மனித மேம்பாடு மற்றும் மனித கௌரவம் என்கிற பயணம், உரிமைகள், கடமைகள் என்ற இரண்டு தடங்களில் செல்கிறது, உரிமைகளுக்கு சமமாகக் கடமைகளும் முக்கியமானவை என்று பிரதமர் வளியுறுத்தினார். ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால் அவை தனியாக விவாதிக்கப்படக்கூடாதவை” என்று அவர் கூறினார். எனவே, ஒவ்வொரு இந்தியனும், தனது உரிமைகளைப் பற்றி அறிந்திருந்தாலும், தனது கடமைகளைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்.

நண்பர்களே!

எதிர்காலச் சந்ததியினரின் மனித உரிமைகள் குறித்து நாம் தொடர்ந்து உலகை எச்சரித்து வருகிறோம். சர்வதேசச் சூரிய மின்சக்தி கூட்டணி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி இலக்குகள், ஹைட்ரஜன் இயக்கம் போன்ற நடவடிக்கைகளை அவர் அழுத்தமாக சுட்டிக்காட்டினார். நீடித்த வாழ்வு, சூழலுக்கு உகந்த வாழ்க்கை என்ற திசையில் இந்தியா விரைவாக முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார். மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக மக்கள் திசையில் பணிபுரியும் அனைத்து அறிவு ஜீவிகளும் இந்த திசையில் தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட நான் விரும்புகிறேன். உங்கள் எல்லா முயற்சிகளும் உரிமைகளுடன் கடமை உணர்வை நோக்கி மக்களை ஊக்குவிக்கும். இந்த வாழ்த்துகளுடன், நான் எனது உரையை முடித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

***********


(Release ID: 1764340) Visitor Counter : 5667