இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தூய்மை இந்தியா இயக்கம்

Posted On: 13 OCT 2021 5:30PM by PIB Chennai

இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள வரலாற்று சிறப்புமிக்க, முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஆன்மீக தலங்களில் தூய்மை இந்தியா இயக்க செயல்பாடுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

வழிபாட்டு இடங்கள், குறிப்பாக அதிகம் பேர் வருகை புரியும் ஆன்மீக தலங்களில், தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற தூய்மை நடவடிக்கையில் சுமார் 100 நாட்டுநலப்பணி திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். சுத்தம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

அமைச்சகம் அடையாளம் கண்டுள்ள இருபத்தி ஐந்து முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய சிறப்புமிக்க இடங்களில், நேரு யுவகேந்திர சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் தூய்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுற்றுலா தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவில், கயாவில் உள்ள மகாபோதி கோவில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம், ஜம்முவில் உள்ள அமர் மஹால் மாளிகை, கர்நாடகாவில் உள்ள ஹம்பி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ, ஒடிசாவில் உள்ள பூரி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அமிர்தசரஸில் உள்ள தங்க கோவில் மற்றும் ஜாலியன் வாலாபாக், லக்னோவில் உள்ள ரூமி தர்வாசா மற்றும் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பவ்ரி ஆகிய இடங்களில் தூய்மை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் நேரு யுவகேந்திரா சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் செவ்வாய்க்கிழமை அன்று தூய்மை இந்தியா நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763648

**********


(Release ID: 1763708) Visitor Counter : 356