தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூர்தர்ஷன் சந்தனா சேனலுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நேயர்கள்: தென்மாநிலங்களில் டிஜிட்டல் பிரசார் பாரதி முன்னேற்றம்

Posted On: 13 OCT 2021 11:53AM by PIB Chennai

 தென் மாநிலங்களிலிருந்து பிரசார் பாரதியின் டிஜிட்டல் தளங்கள் கடந்த சில நாட்களாக வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளன

யூடியூப் சேனலில் டிடி சந்தனா (கர்நாடகா) சேனல் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நேயர்களைப் பெற்று முதலிடத்திற்கு வந்துள்ளது. டிடி சப்தகிரி ஆந்திரப்பிரதேசம், டிடி யதாகிரி (தெலங்கானா) ஆகிய சேனல்கள் ஐந்து லட்சம் நேயர்கள் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றன.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யூடியூப் சந்தாதாரர்களுடன் தமிழ், மலையாளம் செய்திப் பிரிவுகள் மற்றும் தூர்தர்ஷன் கேந்திராக்கள் ஒன்றோடு ஒன்றும் மற்றும் இதர பிராந்திய மொழி ஊடக நிறுவனங்களுடனும் ஆரோக்கியமான போட்டியில் உள்ளன. தூர்தர்ஷன் தேசிய சேனல்களுக்கு இடையே சர்வதேச ஆங்கில செய்தி சேனல் டிடி இந்தியா, யூடியூப் தளத்தில் சமீபத்தில் ஒரு லட்சம் சந்தாதாரர்கள் என்ற இலக்கைக் கடந்துள்ளது.

தனித்துவமான நிகழ்ச்சிகள், இளைஞர்கள் மற்றும் உலகளாவிய  நேயர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தியக் கதை ஆகியவற்றுக்கு நன்றி.

-------


(Release ID: 1763589) Visitor Counter : 274