பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

பாஸ்பேட் & பொட்டாஷ் உரங்களுக்கு 2021-22 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் (1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரை) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 OCT 2021 8:32PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு 2021-22 ஆம் ஆண்டில்  (1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரை) வழங்குவது என்ற மத்திய ரசாயன துறையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்கள் கீழ் வருமாறு:-

1 கிலோ பாஸ்பேட் உரத்திற்கு ரூ.45.323, பொட்டாஷ் உரத்திற்கு ரூ.10.116 என்ற அளவில் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.28,602 கோடி ஒதுக்கப்படும்.

சிறப்பு ஒருமுறை தொகுப்பாக டிஏபி உரத்திற்கு ரூ.576 கோடி கூடுதல் மானியம் வழங்கப்படும்.

******


(Release ID: 1763580) Visitor Counter : 278