இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் கீழ் டில்லி ஹுமாயுன் கல்லறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பங்கேற்பு

Posted On: 12 OCT 2021 12:44PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், டில்லி ஹூமாயுன் கல்லறை வளாகத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா பிரச்சார நிகழ்ச்சியில் இன்று காலை பங்கேற்றார். நிகழ்ச்சியில் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

இளைஞர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி உஷா ஷர்மா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், NYKS மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த தூய்மை இந்தியா இயக்கத்தில் பங்கேற்றனர்.

நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படும் ஒரு மாத கால தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குப்பைகளை அகற்றுதல் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் ஆசாதிக்கா அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அனுராக் தாகூர், தேச பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தூய்மை இந்தியா பிரச்சாரம் மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த இயக்கத்தின் மூலம், தூய்மை இந்தியாவின் அவசியத்தை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அக்டோபர் 1‌ முதல் 31ஆம் தேதி‌ வரை நாடு முழுவதும் 75 லட்சம் கிலோ கழிவுகளை குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டு மக்களின் தன்னார்வ தொண்டு ஆதரவுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் திரு அனுராக் தாகூர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763198

                                                                                                  ****(Release ID: 1763369) Visitor Counter : 269