இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தில்லி ஹாக்கி வார இறுதி லீக் போட்டி: திரு அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார்
Posted On:
10 OCT 2021 1:10PM by PIB Chennai
மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் ‘தில்லி ஹாக்கி வாரயிறுதி லீக் போட்டி 2021-22 -ஐ, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திரு அனுராக் தாகூர் பேசியதாவது:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுக்களின் வெற்றி, ஹாக்கி விளையாட்டுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது. இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. இந்த முயற்சிக்காக தில்லி ஹாக்கி அமைப்பை நான் பாராட்டுகிறேன். இது அடிமட்ட அளவில் அதிக திறமையை வளர்க்க உதவும்.
உலகளவில் சிறப்பாக செயல்படுவதை நோக்கி, அடிமட்ட அளவில் திறமைகளை வளர்ப்பதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். பயிற்சி மற்றும் போட்டிகள் வீரர்களின் மன உறுதியை ஊக்குவிப்பதால், இரண்டுமே சம அளவில் முக்கியம். இது போன்ற போட்டிகளை அதிக மாநிலங்கள் நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அப்போதுதான், ஹாக்கியை வளர்க்க முடியும். இளம் திறமையாளர்களுக்கு தங்கள் திறன்களை வளர்க்க வாய்ப்புகள் கிடைக்கும்
இந்த ஹாக்கி போட்டி, இந்திய விளையாட்டு ஆணையம், தில்லி ஹாக்கி கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. இதில் 36 அணிகள் போட்டியிடுகின்றன. இன்னும் அதிக அணிகள் பின்னர் பங்கு பெறும். இந்த போட்டி இன்று தொடங்கியது. ஒவ்வொரு வார இறுதியிலும், 4 போட்டிகள் விளையாடப்படும். முதல் போட்டி, தில்லி பல்கலைக்கழகத்தின் ஷ்யாம் லால் கல்லூரி மற்றும் தி பெய்த் கிளப் இடையே விளையாடப்பட்டது.
இந்த விளையாட்டின் தொடக்க விழாவில், முன்னாள் ஹாக்கி வீரர் பத்மஸ்ரீ ஜாபர் இக்பால், ஹாக்கி உலக கோப்பை(1975) போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிரிகேடியர் சிம்னி, மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி கோல் கீப்பரும் மற்றும் அர்ஜூனா விருது பெற்றவருமான ஹெலன் மேரி இன்னசென்ட் ஆகியோர் சிறந்து விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762654
***
(Release ID: 1762709)
Visitor Counter : 227