சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பூசி வழங்கலின் முன்னேற்றத்தை 19 மாநிலங்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஆய்வு செய்தார்

Posted On: 09 OCT 2021 3:33PM by PIB Chennai

அனைத்து முக்கிய மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் மற்றும் திட்ட இயக்குநர்களுடன் (தேசிய சுகாதார இயக்கம்) இன்று கலந்துரையாடிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்த மாநிலங்களில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

100 கோடி டோஸ்களை வழங்குவதே இந்தியாவின் கொவிட் -19 தடுப்பூசி பயணத்தின் உடனடி மைல்கல் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். 94 கோடி தடுப்பூசி மருந்துகளை இந்தியா இதுவரை வழங்கியுள்ளது.

புனிதம், மகிழ்ச்சி மற்றும் பெரும் கூட்டங்கள் பண்டிகைகளின் அடையாளமாக உள்ளதாக குறிப்பிட்ட டாக்டர் மாண்டவியா, கொவிட் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால், கொவிட்-19 தொற்று கட்டுப்படுத்தல் நடவடிக்கை கேள்விக்குறியாகி விடும் என்றார். கொவிட் விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாக பின்பற்றுவதும், தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்துவதுமே இதற்கான இரட்டை தீர்வாகும்,” என்று அவர் கூறினார். 

மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762424

*****************(Release ID: 1762494) Visitor Counter : 246