பிரதமர் அலுவலகம்

பிரதமர் கேர்ஸ் (PM CARES) நிதியில் நிறுவப்பட்ட பி எஸ் ஏ PSA ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர், நாட்டுக்கு அர்ப்பணித்தார்

35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் அர்ப்பணித்தார்

இப்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன

அரசுத் தலைவராக தடையற்ற பயணமாக தொடர்ந்து நீடித்து 21 -வது ஆண்டில் பயணிப்பதையடுத்து, நாட்டு மக்களுக்கும், உத்தராகண்ட் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார் அவர்
"உத்தராகண்ட் மண்ணுடனான எனது உறவு இதயப்பூர்வமானது மட்டுமல்ல, செயலாலும் கூட, சாறு மட்டுமல்ல, பொருளும் கூட "

" இந்தியா, கொரோனா பெருந்தொற்றினை எதிர்த்துப் போராட குறுகிய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள், நம் நாட்டின் திறனைக் காட்டுகின்றன. பெருந்தொற்றுக்கு முன்னர், ஒரு பரிசோதனைக்கூடம் என்பதிலிருந்து, சுமார் 3000 பரிசோதனைக்கூடங்கள் கொண்ட நெட்வொர்க் உருவாக்கப்பட்டது.

தேவை அதிகரித்ததால், மருத்துவ ஆக்ஸிஜனின் உற்பத்தியை 10 மடங்கு அதிகரித்தது இந்தியா.

"வெகு விரைவில், இந்தியா, தடுப்பூசி செலுத்துவதில் 100 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டும்"

"குடிமக்கள் தங்கள் பிரச்னைகளுடன் வந்து அதன்பிறகு நடவடிக்கை எடுக்கும் வரை அரசு இப்போது காத்திருப்பதில்லை. இந்தத் தவறான கருத்து அரசு என்ற மனப்பான்மையிலிருந்தும், அமைப்பிலிருந்தும் அகற்றப்பட்டு வருகிறது. இப்போது அரசு குடிமக்களிடம் செல்கிறது.

"6-7 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எய்ம்ஸ் வசதி இருந்தது, இன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் எய்ம்ஸை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன"

"நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதும் அரசின் குறிக்கோளாகும்"

"2 ஆண்டுகளில், மாநிலத்தில் சுமார் 6 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு கிடைத்துள்ளது. 2019 ல் 1,30,000 உத்தராகண்ட் குடும்பங்களில் இருந்து, இப்போது உத்தராகண்டின் 7,10,000 வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கிறது ”

"ஒவ்வொரு ராணுவ வீரரின், ஒவ்வொரு முன்னாள் இராணுவ வீரரின் நலன்களைப் பற்றி அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. “ஒரு பதவி – ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் ராணுவத்தைச் சார்ந்த நமது சகோதரர்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை நமது அரசு நிறைவேற்றியது.

Posted On: 07 OCT 2021 12:42PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரா01கண்டின் ரிஷிகேஷ் எய்ம்ஸ் வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பிரதமர் கேர்ஸ் (PM CARES) அமைப்பின் கீழ் நிறுவப்பட்ட 35 பிரஷர் ஸ்விங் அப்ஸார்ப்ஷன் (பி எஸ் ஏ) ஆக்ஸிஜன் ஆலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையடுத்து, நாட்டின் அனைத்து மாவட்டங்களும் இப்போது பி எஸ் ஏ ஆக்ஸிஜன் ஆலைகளை இயக்கும்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், உத்தராகண்ட் ஆளுநர், உத்தராகண்ட் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்று புனித விழாவான நவராத்திரி தொடங்குவது என்பதைக் குறிப்பிட்டார். நவராத்திரி முதல் நாளில் தாய் மலைமகளை வழிபடப்படுவதாக அவர் கூறினார். ஷைல்புத்ரி என்றால் இமயமலையின் மகள் என்று அவர் குறிப்பிட்டார். "இந்த நாளில் நான் இங்கே இருக்கிறேன், இந்த மண்ணை வணங்க இங்கு வந்துள்ளேன், இந்த இமயமலை நிலத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன், வாழ்க்கையில், இதை விடப் பெரிய ஆசீர்வாதம் என்ன இருக்க முடியும்?" என்று பிரதமர் கூறினார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக அவர் மாநிலத்திற்குப் பாராட்டு தெரிவித்தார். "உத்தராகண்ட் மண்ணுடனான அவரது உறவு இதயத்திலிருந்து மட்டுமல்ல, செயலாலும் கூட மட்டுமல்ல, சாறு மற்றும் பொருளும் ஆகும் என்று பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

 

இன்றைய தேதி அவருக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்துப்பேசிய அவர்,  20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான புதிய பொறுப்பைப் பெற்றார் என்பதை நினைவு கூர்ந்தார். மக்களுக்கு சேவை செய்வதும், மக்கள் மத்தியில் வாழ்வதுமான தமது பயணம் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்றும், ஆனால் இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத் முதல்வராக அவருக்கு ஒரு புதிய பொறுப்பு கிடைத்தது என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம்  உருவாக்கப்பட்ட சில மாதங்களுக்குள் அவர் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றதால், தமது பயணத்தின் துவக்கம், உத்தராகண்ட் மாநில உருவாக்கத்துடன் ஒத்துப்போனது என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் ஆசிகளுடன், பிரதமர் பதவியை அடைவோம் என்று தாம் கற்பனை கூட செய்ததில்லை என்றார் அவர். அரசாங்கத்தின் தலைவராக இந்த இடைவிடாத பயணத்தின் 21 வது ஆண்டில் நுழைந்த பிரதமர், நாட்டு மக்களுக்கும், உத்தராகண்ட் மக்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார்.

யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற உயிர் கொடுக்கும் சக்திகள் வலுப்பெற்ற மண்ணிலிருந்து , இன்று, ஆக்ஸிஜன் ஆலைகள் அர்ப்பணிக்கப்படுகின்றன என்று திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியா, கொரோனா பெருந்தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக குறுகிய காலத்தில் ஏற்படுத்திய வசதிகள், நமது நாட்டின் திறனைக் காட்டுகிறது என்று பிரதமர் கூறினார். பெருந்தொற்றுநோய்க்கு முன்னர், ஒரு பரிசோதனை ஆய்வகம் என்றிருந்ததிலிருந்து, சுமார் 3000 பரிசோதனை ஆய்வகங்கள் கொண்ட நெட்வொர்க் உருவாக்கப்பட்டது. ஒரு இறக்குமதியாளராக இருந்து வந்த இந்தியா, முகக்கவசங்ககள் மற்றும் மருத்துவ உபகரணப் பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கூட புதிய வென்டிலேட்டர் வசதிகள் வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டன. கொரோனா தடுப்பூசியை இந்தியா விரைவாகவும், பெருமளவிலும் தயாரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் விரைந்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி இயக்கத்தை இந்தியா செயல்படுத்தியுள்ளது. இந்தியாவின் செயல்பாடு நமது உறுதிப்பாடு, சேவை மற்றும் நமது ஒற்றுமையின் சின்னம் என்று பிரதமர் கூறினார்.

இந்தியா, சாதாரண நாட்களில், ஒரு நாளைக்கு 900 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வந்ததாகக் கூறிய பிரதமர், தேவை அதிகரித்ததால், இந்தியா, மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை 10 மடங்குக்கு மேல் அதிகரித்தது என்றார். இது உலகிலுள்ள எந்த நாட்டிற்கும் கற்பனை செய்ய முடியாத இலக்கு; ஆனால் இந்தியா அதை அடைந்து விட்டது என்றும்  அவர் கூறினார்,

நாட்டில் 93 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிப்பதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். வெகு விரைவில் இந்தியா 100 கோடியைத் தாண்டும். கோவின் தளத்தை ஏற்படுத்தியதன் மூலம், பெருமளவில் எவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதற்கு முழு உலகிற்கும் இந்தியா வழி காட்டியுள்ளது என்றார் பிரதமர்.

குடிமக்கள் தங்கள் பிரச்னைகளுடன் வந்து அதன்பிறகு தான் நடவடிக்கை எடுக்கும் என்று இப்போது அரசு காத்திருப்பதில்லை என்று பிரதமர் கூறினார். இந்தத் தவறான கருத்து அரசாங்க மனப்பான்மையிலிருந்தும், அமைப்பிலிருந்தும் அகற்றப்பட்டு வருகிறது. இப்போது அரசாங்கம் குடிமக்களிடம் செல்கிறது.

6-7 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சில மாநிலங்களில் மட்டுமே எய்ம்ஸ் வசதி இருந்தது; இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். 22 எய்ம்ஸ் என்ற வலுவான கட்டமைப்பை உருவாக்கும் வகையில், நாம் 6 எய்ம்ஸ் என்ற நிலையிலிருந்து வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் அவர். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியாவது இருக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாகும். முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய், உத்தராகண்ட் உருவாக்கப்பட வேண்டும் என்ற கனவை நிறைவேற்றினார் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இணைப்பு என்பது வளர்ச்சியுடன் நேரடி தொடர்பு கொண்டது என்று திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது உத்வேகத்தின் காரணமாக, இன்று நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் இணைப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார்.

2019 இல் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன், உத்தராகண்டில் 1,30,000 வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் கிடைத்திருந்தது என்று கூறிய பிரதமர், இன்று உத்தராகண்ட் மாநிலத்தின் 7,10,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வரத் தொடங்கியுள்ளது என்றார். அதாவதுஇரண்டே ஆண்டுகளுக்குள், மாநிலத்தில் சுமார் 6 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கிடைத்துள்ளன.

ஒவ்வொரு ராணுவ வீரரின், ஒவ்வொரு முன்னாள் ராணுவ வீரரின் நலன்களுக்காகவும் அரசு மிகுந்த  அக்கறையுடன் செயல்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். “ஒரு பதவி – ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் ராணுவத்தைச் சார்ந்த  நமது சகோதரர்களின் 40 ஆண்டுகால கோரிக்கையைத் தமது அரசு நிறைவேற்றியதாகவும் அவர் கூறினார்.

------



(Release ID: 1761857) Visitor Counter : 271