சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் சுகாதாரப் பயன்கள் தொகுப்பை தேசிய சுகாதார ஆணையம் திருத்தியமைத்துள்ளது
Posted On:
05 OCT 2021 6:16PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் (ஏபி பிஎம்-ஜே) சுகாதாரப் பயன்கள் தொகுப்பை அதை செயல்படுத்தும் தலைமை அமைப்பான தேசிய சுகாதார ஆணையம் திருத்தியமைத்துள்ளது.
சுகாதாரப் பயன்கள் தொகுப்பின் திருத்தப்பட்ட பதிப்பில் (எச்பிபி 2.2), பிஎம்-ஜே-வின் கீழ் சில தொகுப்புகளின் விகிதங்கள் 20 சதவிகிதம் முதல் 400 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 400 செயல்முறை விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன மற்றும் கருப்பு பூஞ்சை தொடர்பான ஒரு புதிய கூடுதல் மருத்துவ மேலாண்மை தொகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. 2021 நவம்பர் முதல் எச்பிபி 2.2 அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, “ஆயுஷ்மான் பாரத் பிஎம்-ஜெ-யின் கீழ் பயனாளிகளுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, சுகாதார நல தொகுப்புகளின் திருத்தப்பட்ட பதிப்பு பட்டியலில் உள்ள மருத்துவமனைகளை வலுப்படுத்தும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
புற்றுநோய்க்கான திருத்தப்பட்ட தொகுப்புகள் நாட்டில் உள்ள பயனாளிகளுக்கு புற்றுநோய் பராமரிப்பை மேம்படுத்தும். கருப்பு பூஞ்சை தொடர்பான புதிய தொகுப்புகளைச் சேர்ப்பது பயனாளிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். தனியார் மருத்துவமனைகளில் திட்டத்தின் மேம்பாட்டை மாற்றியமைக்கப்பட்ட தொகுப்பு மேலும் மேம்படுத்தி பயனாளிகளின் செலவுகளை குறைக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761175
------
(Release ID: 1761221)